Jan 7, 2026 - 10:07 AM -
0
கேரளாவை சேர்ந்த பழம்பெரும் நடிகர் புன்னப்ரா அப்பச்சன் தனது 77 வயதில் நேற்று (06) காலமானார்.
1970களில் 'ஒத்தனிண்டே மகன்' என்ற படம் மூலம் மலையாள திரையுலகில் அறிமுகமாகி, தமிழ், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 1,000 இற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர் அப்பச்சன்.
வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் பிரதானமாக நடித்து வந்தார். தமிழில் சுறா திரைப்படத்தில் நடித்திருந்தார். கடைசியாக 'சாலக்குடிகாரன் சங்கதி' திரைப்படத்தில் நடித்தார்.
இந்த நிலையில், வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக நேற்று ஆலப்புழையில் அவர் உயிரிழந்தார்.
இவரது மறைவுக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் மற்றும் திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

