விளையாட்டு
ராகுல் டிராவிட் சாதனையை முறியடித்த ஸ்மித்!

Jan 7, 2026 - 10:24 AM -

0

ராகுல் டிராவிட் சாதனையை முறியடித்த ஸ்மித்!

ஆஷஸ் டெஸ்ட் தொடரின் 5 ஆவது மற்றும் கடைசி போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து துடுப்பெடுத்தாட முடிவு செய்ததது. 

அதன்படி துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 97.3 ஓவரில் 384 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து. அதிகபட்சமாக ஜோ ரூட் 160 ஓட்டங்களையும், ஹாரி புரூக் 84 ஓட்டங்களையும் எடுத்தார். 

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணி மூன்றாம் நாள் முடிவில் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டுக்கு 518 ஓட்டங்களை குவித்து 134 ஓட்டங்கள் முன்னிலை பெற்றுள்ளது. 

தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ் ஹெட் 163 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அணி தலைவர் ஸ்டீவன் ஸ்மித் சதமடித்து 129 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காமல் உள்ளார். 

தனது இரண்டாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடி வரும் இங்கிலாந்து 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 200 ஓட்டங்களை பெற்றுள்ளது. 

டெஸ்ட் போட்டிகளில் அதிக சதம் அடித்தோர் பட்டியலில் ராகுல் டிராவிட், ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் 36 சதங்களுடன் இருந்தனர். 

இந்நிலையில், சிட்னி டெஸ்டில் சதமடித்துள்ள ஸ்டீவன் ஸ்மித் 37 சதங்களுடன் இந்தியாவின் ராகுல் டிராவிட்டை பின்னுக்குத் தள்ளினார். 

இந்தப் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் (51), ஜாக் காலிஸ் (45), ரிக்கி பாண்டிங் (41), ஜோ ரூட் (41), குமார் சங்ககரா (38) ஆகியோர் முதல் 5 இடங்களில் உள்ளனர்.

Comments
0

MOST READ
01
02
03
04
05