Jan 7, 2026 - 12:42 PM -
0
80 ஆண்டுகளுக்கும் மேலான நம்பகமான பெயராக விளங்கிவரும் Durdans வைத்தியசாலை, இலங்கையில் விசேட மருத்துவ சிகிச்சைகளை மேம்படுத்தும் வகையில், தனது நவீன குருதிக்குழாய் மருத்துவ நிலையத்தை (Vascular Clinic) உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்துள்ளது. இந்த முக்கிய முன்னெடுப்பானது, இலங்கையர்கள் வெளிநாடு செல்லாமல், உலகத் தரத்திலான குருதிக்குழாய் தொடர்பான சிகிச்சைகளை உள்நாட்டிலேயே பெறும் வசதியை வழங்குகிறது.
புதிய Vascular Clinic நிலையமானது, மேம்பட்ட நோயறிதல், மிகச் சிறிய துவாரம் ஊடான (minimally invasive) சிகிச்சைகள், திறமையான மருத்துவ ஆலோசகரால் வழிநடத்தப்படும் பராமரிப்பு சேவைகள் உள்ளிட்டவற்றை வழங்குகிறது. மிகச் சிறிய துவாரம் ஊடாக குருதிக்குழாய்களை அணுகுதல், கருவிகள் உட்செலுத்தப்படாத (non-invasive) படங்களை எடுத்தல், கால்கள் போன்ற உடலின் கீழ் பகுதிக்குப் போதுமான இரத்த ஓட்டம் கிடைக்காத நிலை (peripheral artery disease), வெரிகோஸ் நாளங்கள் (varicose veins), குருதிக்குழாய் அடைப்புகள் உள்ளிட்ட நோயாளிகளின் பிரச்சினைகளுக்கான முழுமையான சிகிச்சைகளை இந்நிலையத்தின் ஊடாக வழங்கப்படவுள்ளன. நோய்த் தடுப்பு மற்றும் நீண்டகால பராமரிப்பை மையமாகக் கொண்ட, நோயாளிகளை மையப்படுத்திய அணுகுமுறை மூலம் ஆரம்ப கட்டத்திலேயே நோயைக் கண்டறியவும், மேம்பட்ட சிகிச்சை பெறுபேறுகளை அடைவதையும் இது சாத்தியமாக்கிறது.
இந்த மையம் திறக்கப்பட்டமை தொடர்பில் Durdans வைத்தியசாலை பிரதம நிறைவேற்று அதிகாரி வைத்தியர் லசந்த கருணசேகர கருத்துத் தெரிவிக்கையில், “இலங்கையில் குருதிக்குழாய் தொடர்பான பிரச்சினைகள் அதிகரித்து வருவதுடன், ஒட்டுமொத்த உடல்நலனில் குருதிக்குழாய் ஆரோக்கியம் மிக முக்கியமானதாக காணப்படுகின்றது. புதிதாக திறக்கப்பட்டுள்ள Durdans வைத்தியசாலையின் குருதிக்குழாய் மருத்துவ நிலையமானது, உலகத் தரத்திலான விசேட சிகிச்சைகளை உள்நாட்டிலேயே வழங்குவதற்கான எமது அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது. மேம்பட்ட சிகிச்சை முடிவுகளையும், உயர்ந்த தரமான வாழ்க்கையையும் உறுதி செய்வதற்கான எமது நிபுணத்துவத்தையும் புத்தாக்கத்தையும் தொடர்ச்சியாக மேம்படுத்துவதில் நாம் உறுதியான அர்ப்பணிப்புடன் உள்ளோம்.” என்றார்.
எண்பது வருடங்களுக்கும் மேலாக தமது விசேடத்துவத்தை வெளிப்படுத்தி நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டு புகழ் பெற்ற Durdans வைத்தியசாலை, விசேட வைத்திய சேவைகளில் முன்னணியில் தொடர்ந்தும் புகழ் பெற்று விளங்குகிறது. தற்போது திறக்கப்பட்டுள்ள குருதிக்குழாய் மருத்துவ சிகிச்சை நிலையமானது மேம்பட்ட, அக்கறைமிக்க, எளிதாக அணுகக்கூடிய மருத்துவ சிகிச்சை சேவைகளை சமூகத்திற்கு வழங்கும் அதன் இலக்கை மேலும் வலுப்படுத்தும் மற்றுமொரு முக்கிய படியாகும்.
இது தொடர்பான மேலதிக தகவல்களுக்கு: www.durdans.com இணையத்தளத்திற்கு விரையுங்கள்.

