வணிகம்
Chinese Dragon Café புதிய கிளை காலியில் திறப்பு

Jan 7, 2026 - 03:37 PM -

0

Chinese Dragon Café புதிய கிளை காலியில் திறப்பு

இலங்கையின் சீன உணவு பான வகை துறையில் முதன்மையான வர்த்தகநாமமாக திகழும் Chinese Dragon Café (CDC) உணவகத்தின் புதிய கிளை காலியில் திறக்கப்பட்டுள்ளது. அது பல தசாப்த கால வரலாற்றைக் கொண்டுள்ள அந் நிறுவனத்தின் மேலுமொரு மைல்கல்லாகும். இலங்கையின் 10 ஆவது CDC உணவகமான அது காலி புகையிரத நிலையத்திலிருந்து 300 மீற்றர் தூரத்தில் கொழும்பு வீதி, களுவெல்ல 45 ஆம் இலக்க முகவரியில் அமைந்துள்ளது. 

1942 ஆம் ஆண்டில் சீன தம்பதியினால் பம்பலபிடிய பகுதியில் முதன் முதலில் திறக்கப்பட்ட CDC எமது நாட்டு உணவுப் பிரியர்கள் மத்தியில் நம்பகரமானதும் பிரபல்யமானதுமான வர்ததகநாமமாகும். பிரதான நகரங்கள் அனைத்தையும் உள்வாங்கும் வகையில் அதன் கிளைகள் அமைந்துள்ளன. கல்கிஸ்ஸ, நுகேகொடை, ராஜகிரிய, பெலவத்த, வத்தளை, கந்தானை, கடுவளை மற்றும் யாழ்ப்பாண கிளைகள் அவற்றில் அடங்கும். 

உள்நாட்டில் மாத்திரமின்றி சர்வதேச அளவிலும் தமது வணிக முயற்சிகளை விஸ்தரித்து வரும் அந் நிறுவனத்தின் முதலாவது வெளிநாட்டுக் கிளை 2021 ஆம் ஆண்டில் டுபாயில் திறக்கப்பட்டது. காலியில் கிளையொன்றை திறப்பதன் மூலம் பராம்பரிய சுவைகளுடன் கூடிய சீன உணவு வகைகளை சுவைப்பதற்கு நாட்டின் சகல பகுதிகளிலும் வசிக்கும் மக்களுக்கு வாய்ப்பளிப்பதற்கு CDC கொண்டுள்ள அர்ப்பணிப்பு வெளிப்பட்டுள்ளது. அங்கு சுவைக்கக்கூடிய உணவுகளில் ஹொட் பட்டர் கட்ல்பீஸ், வாழை இலையில் பரிமாறப்படும் சீ புட் ரைஸ், ரைஸ், நூடில்ஸ், சீ புட் வகை முதன்மை இடத்தை பெறுகின்றன. 

சூப்பர் மார்க்கெட்டுகளில் கொள்வனவு செய்யக்கூடிய போத்தலில் அடைக்கப்பட்ட CDC சிலீ பேஸ்ட் வகை உணவுக்கும் பெரும் வரவேற்ப்பு நிலவுகிறது. சகல உணவு வகைகளினதும் சுவையினை பல தசாப்தங்களாக மாறாது பேணுகின்றமை தனித்துவமானதொரு விடயமாகும். காலத்துக்கு காலம் மாறக்கூடிய நுகர்வோர்களின் தேவைகளை மிகச் சரியாக அடையாளங் கண்டுள்ள CDC கட்டணமில்லா விநியோகச் சேவை (Free Delivery), விஷேட வைபவங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு தேவையான உணவு வகைகளை வழங்குதல் (Catering), இணையவழி முறையில் உணவு ஆடர்களை பெறல் போன்ற பல்வேறு சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. 

புதிய உணவகக் கிளை திறக்கப்பட்டமை தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள CDC தலைமை நிறைவேற்று அதிகாரி திரு கயான் பிரனாந்து நாட்டின் தென் பிராந்தியத்தில் வசிக்கும் நுகர்வோர் பலர் CDC உடன் கைக்கோர்த்துள்ள காரணத்தினால் காலி மாதிரியான ஒரு பிரதேசத்தில் தமது உணவகக் கிளையொன்றை திறக்க வேண்டியது அத்தியாவசிய தேவையாக காணப்பட்டதாக குறிப்பிட்டார். “தென் மாகாண மக்களுக்கு சேவையாற்றக் கிடைத்தமையிட்டு மகிழ்ச்சி அடைகின்றேன். வருங் காலத்தில் இப்பகுதி மக்களுக்கு மிகவும் நெருக்கமான உணவு, பான வர்த்தகநாமமாக மாறுவதே எமது நோக்கமாகும்” என அவர் மேலும் தெரிவித்தார்.

Comments
0

MOST READ
01
02
03
04
05