Jan 7, 2026 - 04:01 PM -
0
பாடசாலை மாணவர்களுக்கான கலைத்திட்டங்களைத் தயாரித்தல், பாடப்புத்தகங்களைத் தயாரித்தல் மற்றும் அவற்றை மீளாய்வு செய்யும் அதிகாரிகளுக்காக இணையவழிப் பாதுகாப்பு, டிஜிட்டல் நன்னடத்தை மற்றும் சைபர் பாதுகாப்பு தொடர்பான வழிகாட்டிக் கோவையொன்றைத் தயாரிக்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
6-13 ஆம் தரங்களுக்கான கல்வியை டிஜிட்டல் மயமாக்குவதற்கான செயலணியின் இணையவழிப் பாதுகாப்பு, டிஜிட்டல் நன்னடத்தை மற்றும் சைபர் பாதுகாப்பு தொடர்பான பணிக்குழுவுடனான கலந்துரையாடலொன்று பிரதமர் தலைமையில் நேற்று (06) அலரி மாளிகையில் நடைபெற்றது.
அங்கு கருத்து வௌியிடும் போதே, பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய இந்த பணிப்புரையை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

