Jan 7, 2026 - 05:27 PM -
0
இலங்கையில் வீட்டு கடன்கள் வழங்குவதில் சந்தையில் முன்னணி வங்கியாகவும், வாடிக்கையாளர்களின் வீடொன்றினை உரிமையாக்கிக் கொள்ளும் கனவுகளை புரிந்துகொள்ளும் வங்கியாகவும் தனது பங்களிப்பினை தொடர்ந்து வழங்கி வரும் கொமர்ஷல் வங்கியானது, Overseas Realty (Ceylon) PLC நிறுவனத்தின் சமீபத்திய திட்டமான Mireka Seascape தொடர் மாடிக்குடியிருப்புகளை கொள்வனவு செய்பவர்களுக்கு தனிப்பயன் வீட்டு கடன் வசதிகளை வழங்குவதற்காக அந்த நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது.
இந்தப் பங்குடைமைக்கிணங்க கொமர்ஷல் வங்கியானது, Overseas Realty நிறுவனத்தின் குடியிருப்புகளை கொள்வனவு செய்பவர்களுக்கு குடியிருப்பின் பெறுமதியில் 100% வரை கடன்களை வழங்க முன்வந்துள்ளது. இதில் ஈடுபடும் அனைத்து தரப்புகளுக்கும் வெளிப்படைத்தன்மை மற்றும் செயல்திறனை மேம்படுத்தும் மூவரடங்கிய (tripartite) ஒப்பந்தங்களின் அடிப்படையில் இந்த கடன் வசதிகள் வழங்கப்படும்.
கொழும்பு, உலக வர்த்தக மையம், (World Trade Center,Colombo) மற்றும் ஹேவ்லொக் சிட்டி (Havelock City) போன்ற முக்கிய அடையாளத் திட்டங்களை வெற்றிகரமாக நிறைவேற்றியதற்காக பெயர் பெற்ற Overseas Realty (Ceylon) PLC, தற்போது டொடந்துவாவில் அமைந்துள்ள தனது புதிய கடற்கரை குடியிருப்பு திட்டமான Mireka Seascape-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.இந்த திட்டத்தில் 168 உயர்தரசொகுசு தொடர் மாடிக் குடியிருப்புகள் மற்றும் தனி குடியிருப்புகள் அடங்குகின்றன. கட்டிடக் கலை நயமும் கடற்கரை வாழ்வின் அமைதியும் ஒன்றிணையும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இவ்வீடுகள்,இந்து சமுத்திரமும் ரத்கம ஏரியும் விரிந்த அழகிய காட்சிகளை வழங்குகின்றன. சிறந்த இடம், நவீன வடிவமைப்பு மற்றும் உயர்தர வசதிகளுடன், இலங்கையின் தெற்கு கடற்கரைப் பகுதியில் நவீன கடற்கரை வாழ்விற்கு புதிய அளவுகோலை Mireka Seascape நிறுவுகிறது.
கொமர்ஷல் வங்கியானது இலங்கையின் வீட்டு கடன் சந்தையில் மாற்றமற்ற முன்னணித் தலைவராக தொடர்ந்து திகழ்ந்து வருகிறது. போட்டித்தன்மை கொண்ட வட்டி வீதங்களுடனும், நெகிழ்வான மீளச் செலுத்தும் வசதிகளுடனும் கூடிய பல்வேறு நிதி தீர்வுகளை இந்த வங்கி வழங்கி வருகிறது. Overseas Realty போன்ற புகழ்பெற்ற அபிவிருத்தி நிறுவனங்களுடன் கொமர்ஷல் வங்கி மேற்கொள்ளும் தொடர்ச்சியான பங்குடைமைகள், இலங்கையர்களின் வீடு ஒன்றினை சொந்தமாக்கிக்கொள்ளும் கனவுகளை ஆதரிக்கும் அதன் செயலில் முன்னெடுக்கும் அணுகுமுறையை பிரதிபலிக்கின்றன.
இலங்கையில் அமெரிக்க டொலர் 1 பில்லியனுக்கும் அதிகமான சந்தை மூலதனத்தைக் கொண்ட முதலாவது வங்கியாகவும் உலகின் தலைசிறந்த 1000 வங்கிகளின் பட்டியலில் முதன் முதலாக உள்ளடக்கப்பட்ட இலங்கையின் வங்கியாகவும் திகழும் கொமர்ஷல் வங்கி, கொழும்பு பங்குச் சந்தையில் (CSE) வங்கித் துறையில் அதிக சந்தை மூலதனத்தைக் கொண்டுள்ளது. மிகப்பெரிய தனியார் துறை கடன் வழங்குநராகவும், SME துறைக்கு மிகப்பெரிய கடன் வழங்குநராகவும், டிஜிட்டல் புத்தாக்கங்களில் முன்னணியும் வகிக்கும் கொமர்ஷல் வங்கியானது, இலங்கையின் முதலாவது 100% கார்பன்-நடுநிலை பேணும் வங்கியுமாகும்.
கொமர்ஷல் வங்கியானது நாடு முழுவதும் தந்திரோபாயரீதியாக அமைக்கப்பட்ட கிளைகள் மற்றும் தானியங்கி இயந்திரங்களின் வலையமைப்பைச் செயற்படுத்திவருகின்றது. மேலும், பங்களாதேஷில் 20 கிளைகள், மாலைதீவில் பெரும்பான்மையான பங்குகளைக் கொண்ட ஒரு முழுமையான Tier I வங்கி, மியான்மாரில் ஒரு நுண்நிதி நிறுவனம் என சர்வதேச ரீதியில் பரந்தளவில் தடம் பதித்த இலங்கையின் வங்கியாகத் தன்னை நிலைநிறுத்தியுள்ளது. துபாய் சர்வதேச நிதியியல் மையத்தில் (DIFC) ஒரு பிரதிநிதி அலுவலகத்தை நிறுவுவதற்கு துபாய் சர்வதேச நிதியியல் சேவைகள் அதிகாரசபையிடமிருந்து அனுமதிபெற்றதுடன் இவ் மைல்கல்லை எட்டிய இலங்கையின் முதல் வங்கியாகத் தன்னைப் பதிவுசெய்துள்ளது.
மேலும்,வங்கியின் முழுமையான உரித்துடைய துணை நிறுவனங்களான CBC Finance Ltd மற்றும் Commercial Insurance Brokers (Pvt) Limited ஆகியவையும் தங்கள் சொந்த கிளை வலையமைப்புகள் மூலம் பல்வேறு நிதிச் சேவைகளை வழங்குகின்றன.

