Jan 7, 2026 - 06:55 PM -
0
நோர்வூட் பிரதேச செயலகத்திற்கு நிரந்தரக் கட்டிடம் ஒன்று அமையும் பட்சத்திலேயே, பிரதேச மக்களுக்கு அனைத்து வளங்களையும் வசதிகளையும் முழுமையாகப் பெற்றுக்கொள்ள முடியுமென சமூகச் செயற்பாட்டாளர் அருணாச்சலம் சண்முகம் வடிவு தெரிவித்துள்ளார்.
இன்று (07) ஹட்டன் புகையிரத நிலையத்தின் புதிய கட்டிடத்தில் தற்காலிகமாக இயங்கிவரும் நோர்வூட் பிரதேச செயலகத்தை, மீண்டும் நோர்வூட் பகுதிக்குக் கொண்டு செல்ல வேண்டுமென வலியுறுத்தி பிரதேச செயலாளரிடம் மனுவொன்றைக் கையளித்த பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
--

