செய்திகள்
இந்திய இராணுவத் தளபதி - பாதுகாப்புப் பிரதியமைச்சர் சந்திப்பு

Jan 8, 2026 - 12:56 PM -

0

இந்திய இராணுவத் தளபதி - பாதுகாப்புப் பிரதியமைச்சர் சந்திப்பு

இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர துவிவேதி மற்றும் இலங்கையின் பாதுகாப்புப் பிரதியமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்று (07) கொழும்பில் உள்ள பாதுகாப்புப் பிரதியமைச்சர் அலுவலகத்தில் இடம்பெற்றது. 

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இந்திய இராணுவத் தளபதி தலைமையிலான தூதுக்குழுவினர் நேற்று (06) நாட்டை வந்தடைந்திருந்தனர். 

பாதுகாப்புப் பிரதியமைச்சர் அலுவலகத்திற்கு வருகை தந்த இந்திய இராணுவத் தளபதியை, பிரதியமைச்சர் அருண ஜயசேகர மிக அன்புடன் வரவேற்றார். 

இதனைத் தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையில் சுமூகமான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. 

அயல் நாடுகளான இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையில் நீண்டகாலமாக நிலவும் வரலாற்று, கலாசார மற்றும் நாகரிக ரீதியிலான தொடர்புகளை இரு தரப்பினரும் இதன்போது மீண்டும் உறுதிப்படுத்திக்கொண்டனர்.

Comments
0

MOST READ
01
02
03
04
05