வணிகம்
நாட்டில் தொழில்முயற்சியாண்மை கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்குடன் Salesforce ஆரம்பிக்கும் தொடக்க வணிகமுயற்சி நிகழ்ச்சித்திட்டம்

Jan 8, 2026 - 02:21 PM -

0

நாட்டில் தொழில்முயற்சியாண்மை கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்குடன் Salesforce ஆரம்பிக்கும் தொடக்க வணிகமுயற்சி நிகழ்ச்சித்திட்டம்

உலகில் 1 வது ஸ்தானத்தில் திகழும் AI CRM* நிறுவனமான Salesforce, இந்நாட்டில் துடிதுடிப்பான தொடக்க வணிக முயற்சிக் கட்டமைப்பின் வளர்ச்சி மற்றும் புத்தாக்கத்தை ஊக்குவிக்கும் நோக்கில், Salesforce Startup Program என்ற நிகழ்ச்சித்திட்டத்தை இலங்கையில் ஆரம்பிக்கின்றமை குறித்து இன்று அறிவித்துள்ளது. 2026 ஜனவரி முடிவில் இந்நிகழ்ச்சித்திட்டத்தை ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதுடன், இலங்கையில் தொடக்க வணிக முயற்சிகளுக்கு விரிவான Salesforce தொகுதிக்கான அணுகலுக்கு இது அவர்களுக்கு வாய்ப்பளிக்கும். செயற்கை நுண்ணறிவு வலுவூட்டப்பட்ட தயாரிப்புக்கள், வழிகாட்டல் நிகழ்ச்சித்திட்டங்கள், இணைந்த சந்தை வாய்ப்புக்கள், அவர்கள் தம்மைக் கட்டியெழுப்பி, வளர்ச்சியீட்டி, மற்றும் வணிக நடவடிக்கைகளை விரிவுபடுத்திக்கொள்ள உதவும் ஒரு சமூகம் உள்ளிட்ட பல்வேறு அனுகூலங்களை இது உள்ளடக்கியுள்ளது. 

இலங்கையில் தொடக்க வணிக முயற்சிகள் வெகுவேகமாக பரிணமித்து வருவதையும், அதீதி வளர்ச்சிக்கான வாய்ப்புக்களையும், புத்தாக்கத்தால் வழிநடாத்தப்படும் வணிகங்களையும் Salesforce இனங்கண்டு, அங்கீகரித்துள்ளதை இந்த முயற்சியின் ஆரம்பம் பிரதிபலிக்கின்றது. 

தெற்காசியாவைப் பொறுத்தவரையில் இந்தியாவுக்கு அடுத்ததாக, வலுவாக வளர்ச்சி கண்டு வருகின்ற தொடக்க வணிக முயற்சிகளின் அளவில் இரண்டாவது ஸ்தானத்தில் (second-strongest) இலங்கை காணப்படுவதுடன், ஸ்தாபகர்களின் வழிநடாத்தலுடனான புத்தாக்கத்தின் உத்வேகம் சீராக வளர்ச்சி கண்டு வருகின்றது. பிரதானமாக மென்பொருளின் உந்துசக்தியுடன் முன்னெடுக்கப்படுகின்ற புள்ளி விபர தரவு தொடர்பான தொடக்க வணிக முயற்சிகள் நாட்டின் ஒட்டுமொத்த தொடக்க வணிக முயற்சிகளில் சுமார் 60% ஆக தற்போது காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. இலங்கையின் புத்தாக்கம் குறித்து உலகளாவிய ஆர்வமும், கவனமும் தொடர்ந்தும் அதிகரித்துச் செல்லும் போக்கு காணப்படும் நிலையில், தொடக்க வணிக்க முயற்சிகளை ஸ்தாபிப்பவர்கள் உலகளாவிய தளங்கள் மற்றும் சந்தைகளுடன் இணைப்பை ஏற்படுத்தி தமது ஆரம்ப உத்வேகத்தை நிலைபேணத்தக்க அளவில் வளர்ச்சி பெறச் செய்வதே Salesforce தொடக்க வணிக முயற்சி நிகழ்ச்சித்திட்டத்தின் நோக்கமாகவுள்ளது. 

2021 டிசம்பரில் Salesforce தொடக்க வணிக முயற்சி நிகழ்ச்சித்திட்டம் ஆரம்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பல்வேறு சந்தைகள் மத்தியில் வெளிப்படையான விளைவுகளைத் தோற்றுவித்துள்ளது. இந்நிகழ்ச்சித்திட்டம் தற்போது இந்தியா மற்றும் சிங்கப்பூரில் 435 தொடக்க வணிக முயற்சிகளைக் கொண்ட ஒரு பெரும் சமூகத்திற்கு உதவி வருவதுடன், CloudFiles, Xoxoday, Yellow.ai, Locobuzz மற்றும் Trupeer.ai போன்ற வெற்றிகரமாக இயங்கி வருகின்ற நிறுவனங்கள் உள்ளிட்ட, 230 க்கும் மேற்பட்ட செயற்கை நுண்ணறிவை முதன்மையாகக் கொண்ட தொடக்க வணிக முயற்சிகள் இச்சமூகத்தில் அடங்கியுள்ளன. 

Salesforce ன் தெற்காசிய தலைவரும், பிரதம நிறைவேற்று அதிகாரியுமான அருந்ததி பட்டாசார்யா அவர்கள் இது குறித்து கருத்து தெரிவிக்கையில், “தொழில்நுட்ப திறமைசாலிகளையும் மற்றும் தொழில்முயற்சியாண்மை இலட்சியத்தையும் கொண்ட வலுவான அத்திவாரமொன்றை இலங்கை கட்டியெழுப்பியுள்ளதுடன், தெற்காசியாவிலும், உலகளாவிலும் அதன் தெரிநிலை அதிகரித்துச் செல்லும் போக்கினை எம்மால் அவதானிக்கக்கூடியதாக உள்ளது. Salesforce தொடக்க வணிக முயற்சி நிகழ்ச்சித்திட்டத்தின் மூலமாக, இலங்கையில் தொடக்க வணிக முயற்சிகள் ஆரம்ப வெற்றிகளுக்கு அப்பால் உலகளாவில் விரிவுபடுத்தப்படுவதற்கு ஏற்றதாக தம்மை வளர்த்து, தன்னம்பிக்கையுடன் போட்டியிடும் ஆற்றலைப் பெற்று, நீண்ட கால அடிப்படையில் பொருளாதார நற்பலனை உருவாக்குவதற்கு நிறுவனங்கள் தம்மைக் கட்டியெழுப்புவதற்கு உதவி, இலங்கையின் புத்தாக்கப் பயணத்தில் கலங்கரைவிளக்காகச் செயற்படுவதில் நாம் அர்ப்பணிப்புடன் உள்ளோம்.” 

Salesforce ஐப் பொறுத்தவரையில், இலங்கை தொடர்ந்தும் வளர்ச்சிவாய்ப்புக்கான முக்கியமான ஒரு சந்தையாகக் காணப்படுவதுடன், John Keells Holdings மற்றும் Cinnamon Hotels போன்ற முன்னணி நிறுவனங்கள் அடங்கலாக, பல்வேறு தொழில் துறைகள் மத்தியில் டிஜிட்டல் பரிணாம வளர்ச்சியை முன்னெடுக்கின்ற வாடிக்கையாளர்களின் தளம் அதிகரித்த வண்ணம் உள்ளது. வாடிக்கையாளர்களுக்கு உந்துசக்தியளிப்பதுடன் இணைந்ததாக, தனது Trailhead கட்டமைப்பினூடாக நாட்டில் நீண்ட கால அடிப்படையில் டிஜிட்டல் துறை திறமைசாலிகளை வளர்ப்பதிலும் Salesforce பாரிய முதலீடுகளை மேற்கொண்டு வருகின்றது. உள்நாட்டில் தொழிற்படை மேம்பாட்டுக் கூட்டாளர்களின் ஒத்துழைப்புடன், கட்டமைக்கப்பட்ட பயிற்சி, வழிகாட்டல், மற்றும் உள்நாட்டவர்களின் வழிநடாத்தலுடனான மாற்றங்களுக்கான குழுக்களை ஸ்தாபித்தல் ஆகியவற்றினூடாக எதிர்வரும் ஆண்டில் சுமார் 1,000 பயிலுனர்களுக்கு திறமைகளை வளர்ப்பதற்கு உதவும் நோக்கங்களுடன் இம்முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

Salesforce குறித்த விபரங்கள் 

செயற்கை நுண்ணறிவின் துணையுடன் எந்த அளவிலான நிறுவனங்களும் தமது வியாபாரங்களை மீள்கற்பனை செய்வதற்கு Salesforce உதவுகின்றது. நிறுவனங்களுக்கான டிஜிட்டல் தொழிற்படைத் தீர்வான Agentforce ஆனது தனித்த, நம்பிக்கைக்குரிய தளமொன்றில் வாடிக்கையாளர் வெற்றியை வழங்குவதில் மனிதர்களையும், முகவர்களையும் ஒன்றிணைக்கின்ற வரையறைகளற்ற தொழிற்படைத் தோற்றுவிப்பதற்கு Customer 360 applications, Data Cloud, மற்றும் Einstein AI ஆகியவற்றை தங்குதடையின்றி ஒருங்கிணைக்கிறது. கூடுதல் விபரங்களுக்கு: https://www.salesforce.com/in/. *Salesforce, the #1 CRM, powered by AI technology and capabilities.

Comments
0

MOST READ
01
02
03
04
05