Jan 9, 2026 - 01:51 PM -
0
நெஷனல் டெவெலொப்மெண்ட் வங்கியானது (NDB) உலகின் மிகவும் நம்பகமான வாகனங்களில் சிலவற்றிற்கு வாடிக்கையாளர்களுக்கு வசதியான, நெகிழ்வான மற்றும் நியாயமான விலையில் லீசிங் தீர்வுகளை வழங்குவதற்கான வங்கியின் உறுதிப்பாட்டை வலுப்படுத்தும் வகையில், டொயோட்டா லங்காவுடன் ஒரு முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) நுழைந்துள்ளது.
இந்தப்பங்குடைமையானது, சேவை சிறப்பில் அசைக்க முடியாத கவனம் செலுத்துவதற்கு பெயர் பெற்ற இரண்டு நிறுவனங்களான முன்னணி நிதி தீர்வுகள் வழங்குநராக NDB மற்றும் இலங்கையில் டொயோட்டா மற்றும் HINO வாகனங்களின் பிரத்தியேக விற்பனையாளர் மற்றும் விநியோகஸ்தராக திகழும் டொயோட்டா லங்கா ஆகியவற்றை ஒன்றிணைக்கிறது,இந்த ஒத்துழைப்பின் மூலம், வாகன உரிமையை எளிதாகவும் அணுகக்கூடியதாகவும் மாற்ற வடிவமைக்கப்பட்ட கவர்ச்சிகரமான லீசிங் வசதிகளிலிருந்து வாடிக்கையாளர்கள் பயனடைவார்கள், இது NDB இன் தனிப்பயனாக்கப்பட்ட நிதி ஆலோசனையில் நிபுணத்துவம் மற்றும் தரம், ஆயுள் மற்றும் புதுமைக்கான டொயோட்டாவின் நற்பெயரால் ஆதரிக்கப்படுகிறது.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ், டொயோட்டா வாகனங்களுக்கான தனிப்பயனாக்கப்பட்ட லீசிங் தெரிவுக்ஜ்களை NDB விரிவுபடுத்தும், இது வாடிக்கையாளர்கள் போட்டி வீதங்கள், வேகமான செயலாக்கம் மற்றும் தடையற்ற நிதி அனுபவத்தை அனுபவிப்பதை உறுதி செய்யும்.
இந்தப்பங்குடைமையானது NDB இன் வாகனம் சார்ந்த நிதி சலுகைகளின் வளர்ந்து வரும் பிரிவுகளை வலுப்படுத்துகிறது, தனிநபர்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் வர்த்தகங்களை நடைமுறை மற்றும் எதிர்காலத்திற்குத் தயாராக உள்ள தீர்வுகளுடன் மேம்படுத்தும் வங்கியின் நீண்டகால உத்தியுடன் இணைகிறது.
இந்தப் பங்குடைமை தொடர்பாக தனிப்பட்ட வங்கி மற்றும் வாடிக்கையாளர் அனுபவத்தின் சிரேஷ்ட துணைத் தலைவர் சஞ்சய பெரேரா கருத்து தெரிவிக்கையில் “NDB இல், நீண்ட கால பெறுமதியை உறுதி செய்யும் அதே வேளையில், அவர்களின் வாழ்க்கை முறையை உயர்த்தும் அர்த்தமுள்ள நிதி தீர்வுகளுடன் வாடிக்கையாளர்களை மேம்படுத்துவதே எமது நோக்கமாகும். டொயோட்டா லங்காவுடனான எமது பங்குடைமையானது , தனிநபர்கள் மற்றும் வர்த்தகங்கள் நெகிழ்வான மற்றும் வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட லீசிங் வசதிகள் மூலம் நம்பகமான வாகன தீர்வுகளை அணுக உதவுவதன் மூலம் இந்த உறுதிப்பாட்டை வலுப்படுத்துகிறது.மேலும் இலங்கையின் வாகனம் சார்ந்த சுற்றுச்சூழல் முறைமையை நியாயமான விலை , வசதி மற்றும் நம்பிக்கையுடன் ஆதரிக்க நாம் எதிர்பார்க்கிறோம்.”
டொயோட்டா லங்காவின் முகாமைத்துவப்பணிப்பாளர் / பிரதம நிறைவேற்று அதிகாரி மனோகர அதுகோரல, தனது உணர்வுகளைப் பிரதிபலித்து தெரிவிக்கையில் , “டொயோட்டா லங்காவில், நிலையான இயக்கம் மூலம் வாழ்க்கையை வளப்படுத்த நாம் உறுதிபூண்டுள்ளோம். NDB உடனான எமது பங்குடைமையானது, அதிக வாடிக்கையாளர்கள் டொயோட்டா வாகனங்களின் தரம் மற்றும் நம்பகத்தன்மையை மிகவும் எளிதாக அனுபவிக்க உதவுவதன் மூலம் இந்த நோக்கத்தை வலுப்படுத்துகிறது. அனைத்து இலங்கையர்களுக்கும் பாதுகாப்பான, புத்திசாலித்தனமான மற்றும் அணுகக்கூடிய வாகன இயக்கத்தை ஊக்குவிக்கும் எமது இலக்கினை மேம்படுத்த நாம் ஒன்றிணைந்து செயற்படுகிறோம் .”
1995 இல் நிறுவப்பட்ட டொயோட்டா லங்கா, ஜப்பானின் டொயோட்டா சுஷோ கோர்ப்பரேஷனிற்கு (TTC) முழுமையாகச் சொந்தமான துணை நிறுவனமாகும், மேலும் உலகளவில் மதிக்கப்படும் டொயோட்டா குழுமத்தின் முக்கிய அங்கத்தவராகும். இலங்கையில் வன் -ஸ்டொப் -ஷொப் வாகன மாதிரியின் முன்னோடியாக, பயணிகள் கார்கள் மற்றும் SUVகள் முதல் வர்த்தக வாகனங்கள், டிரக்குகள் மற்றும் மேம்பட்ட பொருள் கையாளுதல் உபகரணங்கள் வரை ஒருங்கிணைந்த வாகன தீர்வுகளை வழங்குவதன் மூலம் நிறுவனம் தொடர்ந்து தொழில்துறை அளவுகோல்களை அமைத்து வருகிறது.
இந்தப்பங்குடைமை மூலம், வாடிக்கையாளர்களுக்கு வசதி, நம்பகத்தன்மை மற்றும் நீண்ட கால பெறுமதியை மேம்படுத்தும் அர்த்தமுள்ள நிதி தீர்வுகள் மூலம் அதிகாரம் அளிப்பதற்கான அதன் உறுதிப்பாட்டை NDB வலுப்படுத்துகிறது. வாகன இயக்கம் வளர்ச்சியடையும் போது, நாடு முழுவதும் தனிநபர் மற்றும் வர்த்தக அபிலாஷைகளை ஆதரிக்கும் நம்பகமான உலகளாவிய வர்த்தக நாமங்களை அணுகுவதற்கு NDB அர்ப்பணிப்புடன் உள்ளது.
இலங்கையில் பட்டியலிடப்பட்ட நான்காவது பெரிய வணிக வங்கி NDB வங்கியாகும். 2025 ஆம் ஆண்டுக்கான யூரோமணி விருதுகளுக்கான சிறப்பு விருதுகளில், SME-களுக்கான இலங்கையின் சிறந்த டிஜிட்டல் வங்கியாக NDB பெயரிடப்பட்டது, மேலும் 2024 ஆம் ஆண்டுக்கான ஆசிய வங்கி மற்றும் நிதி இதழ் (சிங்கப்பூர்) விருதுகளால் ஆண்டின் உள்நாட்டு சில்லறை வங்கி - இலங்கை மற்றும் இலங்கை உள்நாட்டு திட்ட நிதி வங்கி விருதை வென்றது. NDBஆனது NDB குழுமத்தின் தாய் நிறுவனமாகும், இதில் மூலதன சந்தை துணை நிறுவனங்கள் ஒன்றாக இணைந்து ஒரு தனித்துவமான வங்கி மற்றும் மூலதன சந்தை சேவைகள் குழுவை உருவாக்குகின்றன. டிஜிட்டல் வங்கி தீர்வுகளால் இயக்கப்படும் அர்த்தமுள்ள நிதி மற்றும் ஆலோசனை சேவைகள் மூலம் தேசத்தையும் அதன் மக்களையும் மேம்படுத்த வங்கி உறுதிபூண்டுள்ளது.

