Jan 9, 2026 - 02:47 PM -
0
கொமர்ஷல் வங்கியானது வாடிக்கையாளர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, அனைவருக்கும் சிறந்த போக்குவரத்து வசதிகளை எளிதில் அணுகக்கூடியதாக மாற்றும் உறுதிப்பாட்டுடன், இலங்கையில் Mazda வாகனங்களுக்கான அங்கீகரிக்கப்பட்ட முகவராக உள்ள கொலோனியல் மோட்டார்ஸ் (சிலோன்) லிமிடெட் (Colonial Motors (Ceylon) Limited), நிறுவனத்துடன், மூலோபாய பங்குடைமையில் இணைந்துள்ளது. இந்த பங்குடைமையானது, வங்கியின் லீசிங் தீர்வுகள் மூலம் Mazda வாகனங்களை கொள்வனவு செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த ஒத்துழைப்பு, புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) மூலம் அதிகாரப்பூர்வமாக்கப்பட்டுள்ளதுடன், 2026 ஆம் ஆண்டு நவம்பர் 30 வரை நடைமுறையில் இருக்கும் ஒரு கூட்டு ஊக்குவிப்பு பிரசாரத்தையும் அறிமுகப்படுத்துகிறது.
கொமர்ஷல் வங்கியானது இந்தப் பங்குடைமையின் கீழ், தனது நாடு முழுவதும் பரவியுள்ள கிளை வலையமைப்பின் மூலம், ஈர்க்கக்கூடிய வட்டி வீதங்களும் நெகிழ்வான லீசிங் வசதிகளையும் வழங்குகிறது. இதன் மூலம், வாடிக்கையாளர்கள் புதிய Mazda வாகனங்களை எளிதாக பகுதி நிதியுதவியின் மூலம் கொள்வனவு செய்ய முடியும். மேலும், வாடிக்கையாளர்களின் வருமான முறைமைக்கு ஏற்ப மீளச் செலுத்தும் திட்டங்களைத் தெரிவு செய்யும் வாய்ப்பையும் வங்கி வழங்குவதால், செலவினச் சுமை குறைந்து, அனைவருக்கும் எளிதாக அணுகக்கூடியதாக அமைகிறது.
இந்த நன்மைகளுக்கு இணையாக, ஊக்குவிப்புக் காலப்பகுதியில் Mazda வாகனங்களை கொள்வனவு செய்யும் வாடிக்கையாளர்களுக்காக, கொலோனியல் மோட்டார்ஸ் பல்வேறு தனிப்பட்ட சலுகைகளை வழங்குகிறது. அவற்றில், எந்த Mazda வகைக்கும் ரூ. 150,000 சிறப்பு விலைக்கழிவு, இலவச வாகன பதிவு, ஏழு முறை வேலைச் செலவு இல்லாத சேவைகள், மற்றும் முதல் உரிமையாளருக்கான உதிரிப் பாகங்களுக்கு 15% விலைக்கழிவு ஆகியவை அடங்கும்.
இலங்கையில் அமெரிக்க டொலர் 1 பில்லியனுக்கும் அதிகமான சந்தை மூலதனத்தைக் கொண்ட முதலாவது வங்கியாகவும் உலகின் தலைசிறந்த 1000 வங்கிகளின் பட்டியலில் முதன் முதலாக உள்ளடக்கப்பட்ட இலங்கையின் வங்கியாகவும் திகழும் கொமர்ஷல் வங்கி, கொழும்பு பங்குச் சந்தையில் (CSE) வங்கித் துறையில் அதிக சந்தை மூலதனத்தைக் கொண்டுள்ளது. மிகப்பெரிய தனியார் துறை கடன் வழங்குநராகவும், SME துறைக்கு மிகப்பெரிய கடன் வழங்குநராகவும், டிஜிட்டல் புத்தாக்கங்களில் முன்னணியும் வகிக்கும் கொமர்ஷல் வங்கியானது, இலங்கையின் முதலாவது 100% கார்பன்-நடுநிலை பேணும் வங்கியுமாகும். கொமர்ஷல் வங்கியானது நாடு முழுவதும் தந்திரோபாயரீதியாக அமைக்கப்பட்ட கிளைகள் மற்றும் தானியங்கி இயந்திரங்களின் வலையமைப்பைச் செயற்படுத்திவருகின்றது.
மேலும், பங்களாதேஷில் 20 கிளைகள், மாலைதீவில் பெரும்பான்மையான பங்குகளைக் கொண்ட ஒரு முழுமையான Tier I வங்கி, மியான்மாரில் ஒரு நுண்நிதி நிறுவனம் என சர்வதேச ரீதியில் பரந்தளவில் தடம் பதித்த இலங்கையின் வங்கியாகத் தன்னை நிலைநிறுத்தியுள்ளது. துபாய் சர்வதேச நிதியியல் மையத்தில் (DIFC) ஒரு பிரதிநிதி அலுவலகத்தை நிறுவுவதற்கு துபாய் சர்வதேச நிதியியல் சேவைகள் அதிகாரசபையிடமிருந்து அனுமதிபெற்றதுடன் இவ் மைல்கல்லை எட்டிய இலங்கையின் முதல் வங்கியாகத் தன்னைப் பதிவுசெய்துள்ளது. மேலும்,வங்கியின் முழுமையான உரித்துடைய துணை நிறுவனங்களான CBC Finance Ltd மற்றும் Commercial Insurance Brokers (Pvt) Limited ஆகியவையும் தங்கள் சொந்த கிளை வலையமைப்புகள் மூலம் பல்வேறு நிதிச் சேவைகளை வழங்குகின்றன.

