செய்திகள்
ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் திருகோணமலைக்கு அருகில்

Jan 9, 2026 - 11:10 PM -

0

ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் திருகோணமலைக்கு அருகில்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்பில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், இன்று (09) இரவு 10.30 மணியளவில் திருகோணமலையிலிருந்து சுமார் 80 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு-தென்கிழக்கு திசையில் நிலைகொண்டுள்ளது. 

இது நாளை (10) மாலை வேளையில் திருகோணமலைக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையில் இலங்கைக் கடற்கரையைக் கடக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதற்கமைய நாளை (10) வட மாகாணத்தில் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50 - 60 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். 

அத்துடன், யாழ்ப்பாண மாவட்டத்தில் நாளை அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்பதுடன், சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

Comments
0

MOST READ
01
02
03
04
05