செய்திகள்
எனது அரசியல் பயணம் தடையின்றித் தொடரும்..

Jan 10, 2026 - 07:00 AM -

0

எனது அரசியல் பயணம் தடையின்றித் தொடரும்..

தன்னை திடீரெனக் கைது செய்ததன் காரணமாக எனது மக்களுக்கு ஏற்பட்ட அதிர்ச்சியையும் கவலையையும் என்னால் உணர்ந்துகொள்ள முடிவதாக முன்னாள் அமைச்சரும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். 

கணொளி ஒன்றை வௌியிட்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 

மேலும் கருத்து தெரிவித்த அவர், இன்று நான் விடுவிக்கப்பட்டிருக்கின்றேன். அந்த வகையில் எனது விடுதலையையிட்டு மகிழ்ச்சியடைந்த மக்கள், பல்வேறு வழிகளிலும் தமது உணர்வுகளை எனக்கு வெளிப்படுத்தி வருகின்றனர். 

நாட்டின் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களுக்கு எனது நன்றி தெரிவித்து கொள்ள விரும்புகிறேன் பல காரணங்களுக்காக. 

அதேபோன்று, எனது தரப்பு நியாயங்களை நீதிமன்றில் எடுத்துரைத்த சிரேஷ்ட ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் அவர்களுக்கும் அவரது குழுவினருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். 

அத்துடன், அந்த நியாயங்களை உணர்ந்து தீர்ப்பளித்த கம்பஹா மாவட்ட நீதவான் அவர்களுக்கும் எனது நன்றிகளை உரித்தாக்குகின்றேன்." என்றார்.

2001ஆம் ஆண்டு முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தனிப்பட்ட பாவனைக்காக இராணுவத்தினால் வழங்கப்பட்ட துப்பாக்கி ஒன்று, 2019ஆம் ஆண்டு திட்டமிட்ட குற்றவாளியான மாகந்துர மதூஷிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது கண்டெடுக்கப்பட்ட விசாரணைக்கு அமைய அவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

 

பின்னர் நேற்றைய தினம் அவர் பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05