Jan 11, 2026 - 12:42 PM -
0
விஜய் நடிப்பில் வெளியாவதாக இருந்த புதிய படம் தள்ளிப்போன நிலையில், இந்தத் தைப் பொங்கலைக் கொண்டாடும் வகையில் விஜய்யின் மெகா ஹிட் திரைப்படமான 'தெறி' மீண்டும் திரையரங்குகளில் வெளியிடப்படவுள்ளது.
இது குறித்துப் படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு தனது எக்ஸ் (X) தளத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
அவர் குறிப்பிடுகையில்,
"எங்கள் தளபதி விஜய்யின் தரிசனம் இல்லாமல் பொங்கல் பண்டிகை முழுமையடையாது. ரசிகர்களின் ஏமாற்றத்தைப் போக்க, நவீன தொழில்நுட்பத்துடன் மெருகூட்டப்பட்ட 'தெறி' பதிப்பு இந்த பொங்கலுக்கு (ஜனவரி 14) உலகெங்கும் வெளியாகிறது.
தெறிக்க விடலாமா?" என்று பதிவிட்டுள்ளார்.
2016-ல் வெளியான இந்தப் படம், தற்போது நவீன 4K துல்லியத்துடனும், டால்பி அட்மோஸ் (Dolby Atmos) ஒலி அமைப்புடனும் மாற்றப்பட்டுள்ளது.
புதிய படங்கள் வெளியாகாத பல முக்கிய திரையரங்குகளில் 'தெறி' திரையிடப்படவுள்ளது.
புதிய படம் வராவிட்டாலும், விஜய்யின் "பொலிஸ் கெத்து" நிறைந்த 'தெறி' படத்தை மீண்டும் பெரிய திரையில் காண ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

