Jan 11, 2026 - 10:26 PM -
0
இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு 20 போட்டி இன்று (11) இடம்பெறுகின்றது
தம்புள்ளையில் இந்தப் போட்டி இன்றிரவு 7 மணிக்கு ஆரம்பமாக இருந்த நிலையில் அங்கு தொடர்ந்தும் பெய்த மழை காரணமாக போட்டி ஆரம்பமாவதில் தாமதம் ஏற்பட்டது.
இந்நிலையில் குறித்தப் போட்டியானது மழை காரணமாக 12 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்டது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பாடிய இலங்கை அணி 12 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 160 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
இலங்கை அணி சார்பில் துடுப்பாட்டத்தில் அணித் தலைவர் தசுன் சானக்க 5 சிக்ஸர்களை அதிரடியாக விளாசி 9 பந்துகளில் 34 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தார்.
இந்நிலையில் 161 என்ற வெற்றியிலக்கை நோக்கி பாகிஸ்தான் அணி பதிலுக்கு துடுப்பாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

