Jan 13, 2026 - 12:37 PM -
0
Prime Lands Residencies PLC இன் கொழும்பு 07 இல் அமைந்துள்ள சொகுசு தொடர்மனை அபிவிருத்தித் திட்டமான “The Grand” – Ward Place, அண்மையில் நிர்மாணக் கைத்தொழில் அபிவிருத்தி அதிகாரசபையினால் (CIDA) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இலங்கை தேசிய கட்டுமான விருதுகள் நிகழ்வில் கௌரவிப்பைப் பெற்றிருந்தது.
இத்திட்டத்தின் சிறந்த கட்டுமானத் தரத்தை அங்கீகரிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இம்மேம்பாட்டுத் திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்திய முதன்மை ஒப்பந்ததாரராக MAGA Engineering (Pvt) Ltd நிறுவனம் பணியாற்றியுள்ளது. இலங்கை முழுவதும் சிக்கலான மற்றும் பாரிய அளவிலான திட்டங்களை வெற்றிகரமாக முடித்து வழங்கிய வரலாற்றைக் கொண்டுள்ள மாகா இன்ஜினியரிங், நாட்டின் முன்னணி பொறியியல் மற்றும் கட்டுமான நிறுவனங்களில் ஒன்றாக பரவலாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்ட தரநிலைகளுக்கு அமைய, “The Grand” – Ward Place திட்டத்தை வழங்கியதில் MAGA Engineering வெளிப்படுத்திய பொறியியல் ஒழுக்கம், தரக்கட்டுப்பாட்டு நடைமுறைகள் மற்றும் தொழில்முறைச் செயலாக்கம் ஆகியவற்றின் உயர் தரத்தை இந்த விருது பிரதிபலிக்கிறது. மேலும், “The Grand” – Ward Place திட்டத்துடன் தொடர்புடைய கட்டிடக்கலைஞர்கள் மற்றும் சிவில் மற்றும் கட்டமைப்பு பொறியியல் ஆலோசகர்களும் தங்களது பெறுமதிமிக்க தொழில்முறை பங்களிப்பிற்காக கௌரவிக்கப்பட்டுள்ளனர். இது இந்த மைல்கல் திட்டத்தை வெற்றிகரமாக முடிப்பதில் கடைபிடிக்கப்பட்ட வலுவான தொழில்நுட்பத் தரங்கள் மற்றும் கூட்டுச் சிறப்பை மேலும் உறுதிப்படுத்துகிறது.
Ward Place இல் அமைந்துள்ள “The Grand” திட்டத்தின் கட்டுமானப் பணிகள் வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டு, குடியிருப்பாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் அனைத்து குடியிருப்புகளும் முழுமையாக விற்பனை செய்யப்பட்டுள்ளமை இந்த அபிவிருத்திப் பயணத்தின் ஒரு முக்கிய மைல்கல்லாகும். இச்சாதனையானது, வாக்குறுதியளித்தபடி குடியிருப்புகளை முழுமையாகக் கட்டி முடித்து வழங்கும் Prime Lands Residencies இன் நற்பெயரை மேலும் உறுதிப்படுத்துகிறது.
இந்த அபிவிருத்தித் திட்டமானது, Prime Lands Residencies “One Collection” தொகுப்பின் ஒரு அங்கமாகும். இது சிறந்த அமைவிடம், நேர்த்தியான வடிவமைப்பு மற்றும் நீண்டகால மதிப்பு உருவாக்கம் ஆகியவற்றால் வரையறுக்கப்பட்ட, மிகவும் கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அதி-சொகுசு குடியிருப்புத் திட்டங்களின் தொகுப்பாகும். இந்த பாரம்பரியத்தின் தொடர்ச்சியாக, ‘One Collection' கீழ் கொழும்பில் அமையவுள்ள நிறுவனத்தின் அடுத்த திட்டமானது கொழும்பு 05, தலகொடுவ கார்டன்ஸில் அமையப்பெற்றுள்ள “Mon Vie” ஆகும். நகரத்தின் அதிக கேள்விமிக்க பகுதிகளில் உயர்தரமான குடியிருப்புகளை வழங்குவதில் Prime Lands Residencies கொண்டுள்ள ஆர்வத்தை இந்த அபிவிருத்தித் திட்டம் மேலும் பிரதிபலிக்கிறது.
இந்த கௌரவிப்பைப் பெற்றுக் கொண்டமை தொடர்பில் Prime Lands Residencies PLC இன் தவிசாளர் பிரேமலால் பிராஹ்மனகே கருத்துத் தெரிவிக்கையில், “Prime Lands Residencies மற்றும் எமது நிர்மாணப் பங்காளர்களுடன் கொண்டுள்ள உறுதியான கைகோர்ப்பினூடாக எய்தப்பட்டுள்ள உயர் கட்டுமான நியமச் சிறப்பை பிரதிபலிப்பதாக இந்த தேசிய கௌரவம் அமைந்துள்ளது. வீட்டு உரிமையாளர்கள் நம்பக்கூடிய வசிப்பிட, பூர்த்தி செய்யப்பட்ட தொகுதிகளை வழங்குவதற்காக தொழிற்துறையின் சிறந்த செயற்பாட்டாளர்களுடன் செயலாற்றுவதற்கான எமது அர்ப்பணிப்பை மீள உறுதி செய்வதாக இது அமைந்துள்ளது.” என்றார்.
CIDA தேசிய கட்டுமான விருதுகள், கட்டுமானத் தரநிலைகள், பொறியியல் ஒழுக்கம் மற்றும் திட்டச் செயலாக்கம் ஆகியவற்றில் சிறந்து விளங்கும் திட்டங்களை அங்கீகரிப்பதன் மூலம், இத்துறையின் அதிகாரப்பூர்வமான அளவுகோலாக பரவலாகக் கருதப்படுகிறது.
Prime Lands Residencies PLC பற்றி
Prime Lands Residencies PLC ஒரு பொதுப்பட்டியலிடப்பட்ட ரியல் எஸ்டேட் அபிவிருத்தி நிறுவனமாகும். இது இலங்கையின் மிகவும் புகழ்பெற்ற மற்றும் மதிப்பிற்குரிய சொத்து அபிவிருத்திக் குழுமங்களில் ஒன்றான Prime Group இன் அங்கமாகும். 30 ஆண்டுகளுக்கும் மேலான சிறந்த சேவையைக் கொண்டாடும் Prime Group, இலங்கை முழுவதும் 70-க்கும் மேற்பட்ட திட்டங்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. தரம், நம்பகத்தன்மை மற்றும் சரியான நேரத்தில் ஒப்படைத்தல் ஆகியவற்றில் இந்நிறுவனம் சிறந்த நற்பெயரைப் பெற்றுள்ளது.
Prime Group இன் குடியிருப்பு அபிவிருத்திப் பிரிவான Prime Lands Residencies PLC, வீடு வாங்குபவர்களுக்கும் முதலீட்டாளர்களுக்கும் நீண்டகால மதிப்பை வழங்கும் வகையில், நுணுக்கமான வடிவமைப்பு மற்றும் உயர்தரமான வாழ்விடங்களை உருவாக்குவதில் கவனம் செலுத்துகிறது. அத்துடன், The One Collection எனும் பிரத்தியேகத் தொகுப்பின் மூலம் தெரிவு செய்யப்பட்ட அதிநவீன சொகுசுத் திட்டங்களையும் இந்நிறுவனம் வழங்கி வருகிறது. இது வடிவமைப்பில் அதன் மேன்மையையும், பிரீமியம் நகர்ப்புற வாழ்வியலில் கொண்டுள்ள அர்ப்பணிப்பையும் பிரதிபலிக்கிறது.

