Jan 13, 2026 - 06:09 PM -
0
பெற்றோரை கைவிட்டால் மாநில அரசு ஊழியர்களின் சம்பளத்தில் 10 முதல் 15 சதவீதம் வரை அறவிட்டு, அது அவர்களின் பெற்றோருக்கு வழங்க ஏற்பாடு செய்யப்படும் என இந்தியாவின் தெலங்கானா மாநில முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஹைதராபாத் பிரஜா பவனில் நேற்று (12) ‘பால பரோசா’ மற்றும் ‘பிரணய் டே கேர்’ எனும் இரு புதிய திட்டங்களை தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி தொடங்கி வைத்தார். அப்போது அவர் மாற்றுத் திறனாளிகளுக்கு 50 கோடி ரூபா மதிப்புள்ள உபகரணங்களை வழங்கினார்.
இதன் போது கருத்து தெரிவித்த அவர்,
பிரணய் திட்டம் மூலம் முதியோரை நல்ல வழியில் பாதுகாக்க இந்த அரசு தீர்மானித்துள்ளது. இதனால் இனி பெற்றோரை ஒதுக்கி வைத்தாலோ, அனாதை இல்லங்களில் சேர்த்தாலோ, கைவிட்டாலோ அரசு ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து 10 முதல் 15 சதவீதம் வரை மாதாமாதம் அறவிட்டு, அப்பணத்தை கைவிடப்பட்ட பெற்றோருக்கு வழங்க ஏற்பாடு செய்யப்படும். பெற்றோரை கைவிடுபவர்களை நாம் தான் வழிக்கு கொண்டு வர வேண்டும். பெற்றோருக்கு உபயோகப்படா விட்டால், அவர்கள் இந்த சமூகத்துக்கு எப்படி உபயோகப்படுவார்கள் என தெரிவித்தார்.

