வணிகம்
வாடிக்கையாளர் மின்னணு சாதனங்களில் Samsung நிறுவனத்திற்கு Sri Lanka's Choice 2025 விருது

Jan 14, 2026 - 11:38 AM -

0

வாடிக்கையாளர் மின்னணு சாதனங்களில் Samsung நிறுவனத்திற்கு Sri Lanka's Choice 2025 விருது

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் விரும்பத்தக்க தொழில்நுட்ப வர்த்தக நாமங்களில் ஒன்றாக Samsung நிறுவனத்தின் நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில், மதிப்புமிக்க Superbrands - Sri Lanka's Choice 2025 விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளரின் வலுவான விருப்பம், தொடர்ச்சியான வர்த்தக நாம தலைமைத்துவம் மற்றும் இலங்கை வீடுகளுக்கு அர்த்தமுள்ள புத்தாக்கங்களை வழங்குவதற்கான Samsung இன் நிலையான அர்ப்பணிப்பு ஆகியவற்றை இந்த விருது பிரதிபலிக்கிறது. 

Superbrands என்பது வர்த்தகநாம சிறப்பு தொடர்பான உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட சுதந்திரமான மற்றும் நம்பகமான அதிகாரசபையாகும். ஒரு Superbrand என்பது, வாடிக்கையாளர் உணர்ச்சியிலும், நடைமுறை அனுபவத்திலும் மற்ற வர்த்தகநாமங்களை விட மேலான மதிப்பை வழங்கும் வர்த்தகநாமமாகும். தரம், நம்பகத்தன்மை, தொடர்ச்சியான செயல்திறன் மற்றும் நுகர்வோருடன் உருவாக்கிய உணர்ச்சி பிணைப்பு ஆகியவற்றில் காலப்போக்கில் சிறப்பான தரநிலைகளை எட்டிய வர்த்தகநாமங்களை Superbrands திட்டம் அடையாளம் காண்கிறது. 

Superbrands தேர்வு நடைமுறை கடுமையானதும் வெளிப்படையானதுமான மதிப்பீட்டு முறையைப் பின்பற்றுகிறது. விரிவான சந்தை ஆய்வுகளின் அடிப்படையில் வர்த்தகநாமங்கள் குறும்பட்டியலிடப்பட்டு, சுயாதீனமான வர்த்தகநாமம் மற்றும் வணிகத் துறையின் முன்னணி நிபுணர்கள் அடங்கிய குழு, வாடிக்கையாளரின் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு மதிப்பீடு செய்யப்படுகின்றன. ஆரம்பத்தில் ஆயிரக்கணக்கான வர்த்தகநாமங்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டாலும், அவற்றில் மிகக் குறைவான எண்ணிக்கையிலான வர்த்தகநாமங்கள் மட்டுமே இந்த சிறப்பு அங்கீகாரத்தைப் பெறுகின்றன. இதனால் Superbrands என்ற அந்தஸ்து மிகவும் தனித்துவமானதும், உயர்ந்த மதிப்புடையதாகவும் கருதப்படுகிறது. 

இந்த சாதனை குறித்து Samsung Sri Lanka நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் திரு. Samsung Sri Lanka கருத்து தெரிவிக்கையில், “இலங்கை வாடிக்கையாளர்கள் Samsung மீது வைத்திருக்கும் நம்பிக்கையின் உறுதியான சான்றாக இந்த Superbrands அங்கீகாரம் விளங்குகிறது. புத்தாக்கம், தரம் மற்றும் நீண்டகால மதிப்பு ஆகியவற்றில் நாங்கள் கொண்டுள்ள தொடர்ச்சியான கவனம் இதில் பிரதிபலிக்கிறது. அத்தோடு, உலகத்தரம் வாய்ந்த தொழில்நுட்பத்தை இலங்கைக்கு கொண்டு வருவதில் நாங்கள் கொண்டுள்ள அர்ப்பணிப்பையும் இது காட்டுகிறது. வுhடிக்கையாளர் உண்மையான மனதோடு தேர்ந்தெடுத்து நம்பிக்கை வைக்கும் வர்த்தகநாமமாக அங்கீகரிக்கப்பட்டிருப்பது எங்களுக்கு பெருமையளிக்கிறது.” என்று தெரிவித்தார். 

Samsung Sri Lanka & Maldives ஆகிய நாடுகளின் வாடிக்கையபாளர் மின்னணுவியல் பிரிவின் பணிப்பாளரும், தலைவருமான திரு. சப்ரி அன்சார் கூறுகையில், “இலங்கை வாடிக்கையாளருடன் Samsung உருவாக்கியுள்ள வலுவான உறவின் பிரதிபலிப்பே இந்த Superbrands அங்கீகாரம். அன்றாட வாழ்க்கையில் உண்மையான மதிப்பை சேர்க்கக்கூடிய, நம்பகமான மற்றும் எதிர்காலத்திற்கு ஏற்ற தொழில்நுட்பங்களை வழங்குவதிலேயே எங்கள் கவனம் எப்போதும் இருந்திருக்கிறது. நம்பகமான சில்லறை விற்பனை வலையமைப்பு, நெகிழ்வான கட்டண வசதிகள் மற்றும் வலுவான விற்பனைக்கு பிந்தைய சேவைகளின் ஆதரவுடன் இதை நாங்கள் செயல்படுத்தி வருகிறோம். இச்சாதனை, வீட்டு உபகரணங்கள், தொலைக்காட்சிகள் மற்றும் ஸ்மார்ட் வாழ்க்கை தீர்வுகளில் உயர்தர சேவையை வழங்குவதற்கான எமது அர்ப்பணிப்பை மேலும் உறுதிப்படுத்துகிறது. அதேவேளை, உலகளாவிய புத்தாக்கங்களை எமது சந்தைகளுக்கு எளிதில் கிடைக்கக்கூடியதாக்குவதிலும் நாம் கவனம் செலுத்தி வருகின்றோம். என்று தெரிவித்தார். 

வீட்டு உபகரணங்கள், தொலைக்காட்சிகள் மற்றும் ஸ்மார்ட் வாழ்க்கை தீர்வுகள் ஆகிய துறைகளில் Samsung நிறுவனம் தனது முன்னணி இடத்தை மேலும் பலப்படுத்தி வரும் இவ்வேளையில், Samsung நிறுவனம் பெற்றுள்ள Superbrands அங்கீகாரம் அதன் சந்தை முன்னேற்றத்திற்கு மேலும் உறுதுணையாக அமைந்துள்ளது. உலக அளவில், காட்சி தொழில்நுட்பம், படத்தின் தரம் மற்றும் முழுமையான பார்வை அனுபவம் ஆகியவற்றில் முன்னிலை வகிப்பதன் மூலம், Samsung தொடர்ச்சியாக 19 ஆண்டுகளாக உலகின் நம்பர் 1 தொலைக்காட்சி உற்பத்தியாளராக தனது இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது. இதன் பலனை இலங்கை வாடிக்கையாளர்கள் Samsung இன் சமீபத்திய Neo QLED, OLED மற்றும் Lifestyle தொலைக்காட்சி வரிசைகள் மூலம் நேரடியாக அனுபவிக்கின்றனர். 

வீட்டு உபகரணப் பிரிவில், நவீன வாழ்க்கை முறைக்கு ஏற்ற வகையில் புத்திசாலித்தனமான, மின்சார சேமிப்பும், நீடித்த செயல்திறனும் கொண்ட தயாரிப்புகள் மூலம் Samsung நிறுவனம் புதிய தரநிலைகளை தொடர்ந்து நிர்ணயித்து வருகிறது. டிஜிட்டல் இன்வெர்டர் மோட்டார்கள் மற்றும் கம்பிரெசர்களுக்கு வழங்கப்படும் 20 ஆண்டுகால உத்தரவாதம், தயாரிப்பு நம்பகத்தன்மை மற்றும் நீண்ட கால செயல்திறனுக்கான சான்றாக விளங்குகிறது. இது வாடிக்கையாளர்களுக்கு முழுமையான நம்பிக்கையை வழங்குவதோடு, Samsung இன் பொறியியல் சிறப்பின் மீதுள்ள தன்னம்பிக்கையையும் வெளிப்படுத்துகிறது. 

Samsung நிறுவனத்தின் இணைக்கப்பட்ட டிஜிட்டல் சூழலமைப்பின் மையமாக SmartThings தளம் செயல்படுகிறது. திறந்த கட்டமைப்புடன் உருவாக்கப்பட்ட இந்த தளம், பல்வேறு டிஜிட்டல் சாதனங்களை தடையின்றி ஒருங்கிணைக்க உதவுகிறது. இதன் மூலம் பயனர்கள் தங்கள் வீடுகளை எளிதாக கண்காணிக்கவும், கட்டுப்படுத்தவும், தானியங்கியாக இயக்கவும் முடிகிறது. இந்த அமைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில், பாதுகாப்புத் தரத்தில் உருவாக்கப்பட்ட Samsung Knox Security, சாதனங்கள், தரவு மற்றும் இணைக்கப்பட்ட சூழல்களை பாதுகாத்து, தனியுரிமை மற்றும் டிஜிட்டல் நம்பிக்கைக்கான Samsung இன் உறுதிப்பாட்டை மேலும் வலுப்படுத்துகிறது. 

இலங்கையில் Samsung கொண்டுள்ள வலுவான சந்தை இருப்பு, அதன் பரந்த மற்றும் நம்பகமான தேசிய விநியோக வலையமைப்பின் ஆதரவையும் பெற்றுள்ளது. Singer, Singhagiri, Damro மற்றும் Softlogic ஆகிய முன்னணி நிறுவனங்கள் அடங்கிய இந்த வலையமைப்பு, நாடு முழுவதும் பரந்த சில்லறை மற்றும் சேவை அணுகலை உறுதி செய்கிறது. இதன் மூலம் வாடிக்கையாளருக்கு எளிதான அணுகல், நம்பகமான விற்பனைக்குப் பிந்தைய சேவைகள் மற்றும் ஒரே மாதிரியான வர்த்தகநாம அனுபவம் வழங்கப்படுகிறது. உலகளாவிய புத்தாக்கங்களை உள்ளூர் சந்தைக்கு எளிதில் அணுகக்கூடியதாக மாற்றுவது, Samsung SriLanka -வின் முக்கிய மூலோபாய இலக்காக உள்ளது. முன்னணி வங்கிகளுடன் இணைந்து வழங்கப்படும் எளிய கட்டணத் திட்டங்கள் மூலம், அதிக எண்ணிக்கையிலான இலங்கை வாடிக்கையாளர் உயர்தர உலகளாவிய தொழில்நுட்பங்களை அனுபவிக்க Samsung வாய்ப்பளிக்கிறது. இதன் மூலம், உள்ளூர் தேவைகளை நன்கு புரிந்து கொண்டு, சர்வதேச தரநிலைகளை வழங்கும் வர்த்தகநாமமாக Samsung தனது நிலையை மேலும் உறுதிப்படுத்துகிறது. 

Superbrands அந்தஸ்து வாடிக்கையாளர் அங்கீகாரத்திற்கு அப்பால், வணிக சூழலின் அனைத்து தரப்புகளுக்கும் பல்வேறு பயன்களை வழங்குகிறது. வாடிக்கையாளர்கள், சில்லறை விற்பனையாளர்கள், விநியோகஸ்தர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் ஊழியர்கள் என அனைத்து பங்குதாரர்களுக்கும் Samsung ஒரு திறம்பட நிர்வகிக்கப்படும், நிரந்தர மதிப்பைக் கொண்ட வர்த்தகநாமம் என்பதை இந்த அங்கீகாரம் உறுதிப்படுத்துகிறது. Superbrands வெளியீட்டில் இடம்பெறுவது, இலங்கையின் முன்னணி பெருநிறுவன தலைவர்கள் மற்றும் சந்தைப்படுத்தல் நிபுணர்கள் மத்தியில் உயர்மட்ட வெளிப்பாட்டை வழங்குவதோடு, ஊழியர்களின் பெருமிதத்தையும் முதலாளி என்ற வர்த்தகநாம மதிப்பையும் வலுப்படுத்துகிறது. ஜனவரி 12 ஆம் திகதி ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்ற Superbrands கௌரவிப்பு விழாவில், Samsung Sri Lanka நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் மற்றும் வாடிக்கையாளர் மின்னணு பிரிவு பணிப்பாளர் உள்ளிட்ட தலைமை குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு, நாட்டின் மதிப்புமிக்க வர்த்தக நாம தலைவர்களுடன் இணைந்து இந்த முக்கிய சாதனையை கொண்டாடினர். 

இந்த அங்கீகாரம், Samsung Sri Lanka நிறுவனத்திற்கு கிடைத்த ஒரு முக்கிய மைல்கல் சாதனையாகும். இது ஒரு முன்னணி தயாரிப்பு அறிமுகத்திற்கு இணையான முக்கியத்துவம் கொண்டதாக கருதப்படுகிறது. மேலும், நம்பகமான, புத்தாக்கமான மற்றும் உலகத் தரத்திலான தொழில்நுட்பத்தை இலங்கை வாடிக்கையாளருக்கு வழங்குவதில் Samsung கொண்டுள்ள தொடர்ச்சியான முன்னணி நிலையை இது தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.

Comments
0

MOST READ
01
02
03
04
05