Jan 14, 2026 - 11:41 AM -
0
இலங்கை தகவல் தொழில்நுட்ப கற்கை நிலையம் (Sri Lanka Institute of Information Technology - SLIIT), இலங்கை மற்றும் சர்வதேச முன்னணி கூட்டாளர்களைக் கொண்ட கூட்டமைப்புடன் இணைந்து இலங்கையின் நிலைபேணத்தக்க மற்றும் நெகிழ்திறன் கொண்ட எதிர்காலத்திற்காக காபன் சமநிலைத் திறன்களுக்கு வலுவூட்டுதல் (Empowering Net Zero Skills for Sri Lanka’s Sustainable and Resilient Future - ENSURE) என்ற செயற்திட்டத்தை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்துள்ளது. இது தொடர்பாக தேசியரீதியாக பங்களிப்பாளர்கள் பங்குபற்றிய நிகழ்வொன்று பத்தரமுல்லையில் அமைந்துள்ள வோட்டர்ஸ் எட்ஜில் இடம்பெற்றது.
இலங்கை பங்காளர்கள் கூட்டமைப்பில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம், பேராதனை பல்கலைக்கழகம், ருகுண பல்கலைக்கழகம், இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகம், இலங்கை எரிசக்தி முகாமையாளர்கள் சங்கம் (Sri Lanka Energy Managers Association - SLEMA), மூன்றாம் நிலை மற்றும் தொழிற்கல்வி ஆணைக்குழு (Tertiary and Vocational Education Commission - TVEC) ஆகிய தரப்பினர் அடங்கியுள்ளனர். Politecnico di Torino (இத்தாலி), University of Galway (அயர்லாந்து), Universitatea Valahia Târgoviște (ருமேனியா), Hochschule Trier (ஜேர்மனி), மற்றும் Politechnika Warszawska (போலந்து) உள்ளிட்ட ஐந்து ஐரோப்பிய பல்கலைக்கழக கூட்டாளர்களின் ஆதரவு இதற்கு மேலும் வலுவூட்டுவதுடன், இலங்கையின் நிலைபேற்றியல் இலக்குகளுக்கு உதவுவதற்காக சர்வதேச நிபுணத்துவம், தரஒப்பீடு, மற்றும் அறிவுப் பகிர்வு ஆகியவற்றைக் கொண்டு வருகின்றன.
இலங்கையில் நிலைபேற்றியலுக்கு முன்னுரிமையளிக்கும் செயற்பாடுகள் விரைவுபடுத்தப்பட்டுள்ள நிலையில் அதற்கு பதிலளிக்கும் விதத்தில் மூலோபாயரீதியான கல்வி மற்றும் திறன்கள் மேம்பாட்டை முன்னெடுப்பதில் சிறப்பான ஸ்தானத்தில் உள்ள ENSURE, காபனைக் குறைக்கும் பொருளாதாரத்திற்கு நம்பிக்கையான மற்றும் அனைவரையும் அரவணைக்கும் வகையிலான மாற்றத்திற்குத் தேவைப்படும் திறமைசாலிகளை தேசிய ரீதியில் வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தியுள்ளது. உள்நாட்டில் இதனை வழங்கக்கூடிய ஆற்றல் மற்றும் சர்வதேச ரீதியில் மிகச் சிறந்த நடைமுறைகள் ஆகியவற்றை ஒன்றிணைப்பதனூடாக நிலைபேற்றியல் கொண்ட நிறுவன ரீதியான ஆற்றலைக் கட்டியெழுப்பு உதவி, உயர் கல்வி மற்றும் தொழில்பயிற்சி முறைமைகள் மத்தியில் நீண்டகால அடிப்படையில் நற்பலனைத் தோற்றுவிக்கச் செய்யும் வகையில் ENSURE பங்காளர்கள் கூட்டமைப்பு ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது.
SLIIT இயந்திரப் பொறியியல் பீடத்தைச் சேர்ந்த கலாநிதி குமார ஜெயவிக்கிரம அவர்களின் இணைப்புப் பணியுடன் முன்னெடுக்கப்படுகின்ற இச்செயற்திட்டத்திற்கு Erasmus+ நடவடிக்கையின் கீழ் ஐரோப்பிய ஒன்றியத்திடமிருந்து 761,300 யூரோ மொத்தத் தொகை ஒதுக்கப்பட்டு. அங்கீகரிக்கப்பட்டுள்ளதுடன், 2025 டிசம்பரில் ஆரம்பித்த இந்நடவடிக்கை இரு ஆண்டுகளுக்கு முன்னெடுக்கப்படவுள்ளது. 2021 முதல் 2024 வரை முன்னெடுக்கப்பட்ட THREE-LANKA செயற்திட்டத்தின் மூலமாக ஈட்டப்பட்ட பலாபலனை அடிப்படையாகக் கொண்டு கட்டியெழுப்பப்பட்டு, 2050 ம் ஆண்டளவில் காபன் உமிழ்வுச் சமநிலையை அடைய வேண்டும் என்ற இலங்கையின் குறிக்கோளுக்கு இணங்க, இணைப்பாடல் கொண்ட நிகழ்ச்சித்திட்டமொன்றின் கீழே பாடத்திட்டம், பயிற்சிச் சூழல்கள், மற்றும் கூட்டாளர்களின் ஒத்துழைப்பு ஆகியவற்றை வலுப்படுத்துவதன் மூலமாக இதன் நல்விளைவை மேம்படுத்தும் வகையில் ENSURE கட்டமைக்கப்பட்டுள்ளது.
தொழிற்துறைக்கு ஏற்ற கற்றல் வழிமுறைகள் கிடைக்கப்பெறும் வாய்ப்புக்களை விரிவுபடுத்தி, நிலைபேற்றியல் தொடர்புபட்ட திறன்கள் எவ்வாறு உருவாக்கப்படுகின்றன மற்றும் வழங்கப்படுகின்றன என்பதை நவீனமயப்படுத்தி, இலங்கையின் உயர் கல்வி மற்றும் தொழிற்பயிற்சி முறைமைகளை வலுப்படுத்தும் வகையில் ENSURE வடிவமைக்கப்பட்டுள்ளது. அனைவரையும் உள்ளடக்கும் வகையிலான மற்றும் ஏற்புடைய வடிவத்தில் திறன்களை மேம்படுத்துவதைக் கட்டியெழுப்புவதற்கு பயிலுனர்களுக்கு இடமளித்து, நெகிழ்திறன் கொண்ட கற்றல் மற்றும் தேர்ச்சி ஆகியவற்றுக்கு உதவுகின்ற பாகங்களைக் கொண்ட மற்றும் அடுக்கு வடிவிலான முதுகலைப் பட்டப்படிப்புக்களை உள்ளடக்குவதில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அதற்கு இணையாக, காபன் பிரித்தெடுப்பு, ஐதரசன் மூலமான எரிசக்தி, திறன் மிக்க வழியில் எரிசக்தி பயன்பாடு, மற்றும் சுழற்சிப் பொருளாதார நடைமுறைகள் போன்ற முன்னுரிமையளிக்கப்படுகின்ற துறைகளில், தாம் கற்றுக்கொண்டவற்றை பிரயோகிப்பதற்கு உதவும் ஆற்றலை வலுப்படுத்துவதற்கு THREE-LANKA ன் கீழ் ஐந்து பயிற்சி மையங்களை மேலும் மேம்படுத்துவதிலும் இச்செயற்திட்டம் கவனம் செலுத்தும்.
உலகளாவில் இதன் பொருத்தப்பாடு மற்றும் தரம் ஆகியவற்றை உறுதி செய்வதற்காக, ஐரோப்பிய பசுமை ஒப்பந்தம் (European Green Deal) மற்றும் COP29 ன் வெளிப்பாடுகள் அடங்கலாக, சர்வதேசரீதியாக பரிணமித்து வருகின்ற முன்னுரிமைகள் மற்றும் தராதரங்கள் ஆகியவற்றைக் கொண்ட பாடநெறி மற்றும் பயிற்சி அணுகுமுறைகளை ENSURE ஒருங்கிணைக்கும். தொழிற்துறை-கல்விச் சமூகம்-அரசாங்கம் ஆகிய தரப்பிற்கு இடையில் ஒத்துழைப்பினை வலுப்படுத்தி, பிரயோகிக்கப்படக்கூடிய ஆராய்ச்சி, புத்தாக்கம், மற்றும் வேலைவாய்ப்புத் திறன் ஆகியவற்றுடன் திறன்களின் மேம்பாட்டை இணைத்து, கற்றுக்கொள்வது முதல் நிஜ உலகில் அதனைப் பிரயோகிப்பது வரை தெளிவான வழிமுறைகளைத் தோற்றுவிப்பதற்கு இம்முயற்சி மிகவும் முக்கியத்துவம் அளிக்கின்றது.
இது அமுலாக்கம் செய்யப்படுகின்ற காலப்பகுதியில் 1,000 பேருக்குப் பயிற்சிகளை வழங்கி, முதுகலைப் பட்டப்படிப்புக்களுக்கு 300 மாணவர்களை உள்வாங்கும் அதேசமயம், பாடநெறி சார்ந்த புத்தாக்கம் மற்றும் ஆற்றலைக் கட்டியெழுப்புதல் ஆகியவற்றினூடாக நிறுவனரீதியாக நீண்ட கால நிலைபேற்றியலுக்கு ஆதரவளிப்பதே ENSURE ன் நோக்கம்.
இச்செயற்திட்டத்தின் இணைப்பாளர் கலாநிதி குமார ஜெயவிக்கிர அவர்கள் இம்முயற்சி குறித்து கருத்து தெரிவிக்கையில்:
“காபன் சமநிலை தொடர்பான இலங்கையின் குறிக்கோளுக்கு அதே அளவில் திறன்கள் மற்றும் ஆற்றல் மீதான வலுவான முதலீடும் தேவைப்படுகின்றது. தேசிய அளவிலான முன்னுரிமைகள் மற்றும் தொழில்துறை தேவைகளுக்கு உதவுகின்ற நடைமுறை ரீதியான, எதிர்காலத்திற்கு முகங்கொடுக்கும் நிபுணத்துவத்தை பயிலுனர்கள் பெற்றுக்கொள்வதை உறுதி செய்து, உயர் கல்வி மற்றும் தொழிற்பயிற்சி வழிமுறைகள் ஆகிய இரண்டையும் வலுப்படுத்தும் வகையில் ENSURE கட்டமைக்கப்பட்டுள்ளது.”
இச்செயற்திட்டம் முன்னெடுக்கப்படுகின்ற காலப்பகுதியின் பின்னரும் தொடர்ச்சி மற்றும் நிலைபேற்றியல் கொண்ட விளைவுகளுக்கு இடமளித்து, நீண்ட கால அடிப்படையில் நிறுவன ரீதியான ஆற்றலை வலுப்படுத்தும் வகையில் இச்செயற்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
காபன் சமநிலை தொழில்நுட்பங்களை முறைசார் கல்வி மற்றும் தொழிற்பயிற்சி வழிமுறைகளில் உள்ளிணைத்துக் கொள்வதன் மூலமாக, தேசிய ரீதியான முன்னுரிமைகளுடன் ஒருங்கிணைந்த ஆதரவளிக்கும் தீர்வுகளை முன்னெடுக்கும் புத்தாக்கம் மற்றும் நிலைபேற்றியலுடன் தொடர்புபட்ட துறைகளில் வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்தி, எதிர்காலத்திற்கு ஏற்ற தொழிற்படையை உருவாக்குவதற்கு ENSURE பங்களிக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது.
வலுப்படுத்தப்பட்ட பயிற்சி உட்கட்டமைப்பு மற்றும் நவீனமயமாக்கப்பட்ட கற்றல் வழிமுறைகள் ஆகியவற்றுடன், தேசிய மற்றும் உலகளாவிய சூழல் சவால்களுக்கு பதில் நடவடிக்கை எடுப்பதற்கு இலங்கை உதவுவதில் சிறப்பான ஸ்தானத்தில் இந்த முயற்சி காணப்படும் அதேசமயம், நெகிழ்திறன் கொண்ட, காபனைக் குறைக்கும் எதிர்காலத்திற்கு அர்த்தமுள்ள வழியில் பங்களிப்பதற்கு நிறுவனங்களுக்கும், பயிலுனர்களுக்கும் இடமளிக்கும்.

