Header Logo
சினிமா
விஜய் ரசிகர்களின் ரவுடியிசம் - சுதா கொங்கரா பேட்டி!

Jan 14, 2026 - 11:41 AM

விஜய் ரசிகர்களின் ரவுடியிசம் - சுதா கொங்கரா பேட்டி!
Mobitel Inner 1278
EDEX Inner

ஜனநாயகன் மற்றும் பராசக்தி ஆகிய இரண்டு திரைப்படங்களும் பொங்கல் பண்டிகை ஸ்பெஷலாக வெளிவரவிருந்தன. விஜய்யின் கடைசி படத்தோடு சிவகார்த்திகேயன் படம் வருவதை விஜய் ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் சமூக வலைத்தளங்களில் பெரும் சண்டை வந்தது. 

இதன்பின், பராசக்தி இசை வெளியீட்டு விழாவில் பேசிய சிவகார்த்திகேயன், "விஜய் சாரிடம் பேசினேன் சிவகார்த்திகேயன் படம் தாராளமாக வரட்டும்" என கூறியதாக நடிகர் சிவகார்த்திகேயன் பேசியிருந்தார். 

இதன்பின் ஜனவரி 9 ஆம் திகதி வெளிவரவிருக்கும் ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்கப்படாததால் படம் வெளிவரவில்லை. தற்போது உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. 

ஜனவரி 10 ஆம் திகதி வெளிவந்த பராசக்தி படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தன. இதனை தொடர்ந்து விஜய் ரசிகர்கள் பராசக்தி படத்தை சமூக வலைதளங்களில் தொடர்ந்து ட்ரோல் செய்து வந்தார்கள். இதைப்பற்றி பராசக்தி படத்தின் Creative தயாரிப்பாளர் கூட பேசியிருந்தார். 

இந்த நிலையில், படத்தின் இயக்குநர் சுதா கொங்கரா பராசக்தி படத்திற்கு ஏற்படும் தாக்குதல் குறித்து பேட்டி ஒன்றில் வெளிப்படையாக பேசியுள்ளார். "தெரியாத ஐடிகளுக்கு பின்னால் ஒளிந்துகொண்டு அவதூறு பரப்புகிறார்கள். இதனை எந்த நடிகரின் படம் வெளிவரவில்லையோ, அவருடைய ரசிகர்கள் தான் செய்கிறார்கள். அந்த ரசிகர்கள் செய்யும் ரவுடியிசம் மற்றும் குண்டர்தனத்தையும் எதிர்கொள்ள வேண்டியதாக உள்ளது" என கூறியுள்ளார். 

சுதா கொங்கரா இந்த பேச்சையும் தற்போது விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் ட்ரோல் செய்து வருகின்றனர்.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
கச்சத்தீவு என்பது இலங்கைக்குச் சொந்தமானது!

கச்சத்தீவு என்பது இலங்கைக்குச் சொந்தமானது!

கச்சத்தீவு எங்களுடையது!

கச்சத்தீவு எங்களுடையது!

2026 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை

2026 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை

விரிவுரையாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி போராட்டம்!

விரிவுரையாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி போராட்டம்!

பதவி விலகிய NPP உறுப்பினர் வழங்கிய  விளக்கம்!

பதவி விலகிய NPP உறுப்பினர் வழங்கிய விளக்கம்!

சிங்கம் சக மகர வாகன உற்சவம்!

சிங்கம் சக மகர வாகன உற்சவம்!

மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

நாக வாகன உற்சவம்!

நாக வாகன உற்சவம்!

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

Mobitel 1278