Jan 14, 2026 - 03:07 PM -
0
டித்வா சுறாவளியால் பெரும் பாதிப்புக்கு உள்ளான நிலையில் 'தை பிறந்தால் வழிபிறக்கும்' என்ற எமது முன்னோர்களின் நம்பிக்கையினை தலையாய கடமையாக கொண்டு மலையகத்தில் வாழும் மக்கள் தமிழர்களின் பெருநாளான தை திருநாளினையும் உழவர் அறுவடை நாளினையும்,கொண்டாட ஆயத்தமாகி வருகின்றனர்.
இந்நிலையில் ஹட்டன் நகரில் கூடிய மக்கள் சமயத்திற்கு முன்னுரிமை அளித்து, பூசைக்குத் தேவையான பூஜை பொருட்களையும், பொங்கல் வைப்பதற்குத் தேவையான புதுப்பானை, பழங்கள், பால், கரும்பு, மஞ்சள் உள்ளிட்டவைகளையும் அத்தியாவசியப் பொருட்களையும் வாங்கிச் செல்வதனைக் காணக்கூடியதாக இருந்தது.
இதனால் ஹட்டன் நகரத்தில் இன்று (14) வர்த்தக நடவடிக்கைகள் சூடுபிடித்திருந்ததுடன், மக்கள் அதிகமாக வருகை தந்ததனால் நடைபாதைகளில் நெரிசல் நிலையும் காணப்பட்டது. தோட்டப்பகுதியில் உள்ள பெரும் எண்ணிக்கையிலான மக்கள் மலையக நகரங்களை நோக்கிப் படையெடுப்பதனால் ஹட்டன் டிப்போவினால் விசேட போக்குவரத்து ஒழுங்குகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
--

