Jan 14, 2026 - 03:39 PM -
0
தித்வா புயலின் தாக்கத்தைத் தொடர்ந்து, SLT‑MOBITEL தனது முழு செயற்பாட்டு வலையமைப்பு, தொழில்னுட்ப நிபுணத்துவம் மற்றும் அவசர பதிலளிப்பு கட்டமைப்புகள் ஆகியவற்றை ஈடுபடுத்தி இலங்கையின் டிஜிட்டல் இணைப்பு மீட்புப் பணிகளை முன்னெடுத்திருந்தது.
இந்தப் புயல், பல மாவட்டங்களில் பெரும் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு மற்றும் உட்கட்டமைப்புச் சேதங்களை ஏற்படுத்தியதோடு, நாட்டின் தேசிய வலையமைப்பின் பல்வேறு அடுக்குகளையும் முடக்கியது. இருப்பினும், ஒரு சில நாட்களிலேயே, SLT-MOBITEL தனது வரலாற்றிலேயே மிக வேகமான மற்றும் விரிவான மீட்புப் பணிகளில் ஒன்றை முன்னெடுத்து, நாட்டின் தொலைத்தொடர்புத் துறையின் முதுகெலும்பாகத் தனது பங்களிப்பை மீண்டும் உறுதிப்படுத்தியிருந்தது.
பேரிடர் ஏற்பட்ட ஆரம்ப மணிநேரங்களிலிருந்தே, SLT-MOBITEL தனது பிராந்திய செயல்பாட்டுக் கட்டமைப்பு, சிறப்புப் பொறியியல் குழுக்கள் மற்றும் அவசரகால மேலாண்மை வழிமுறைகளைப் பயன்படுத்தி, ஒருங்கிணைக்கப்பட்ட தேசிய அளவிலான மீட்பு நடவடிக்கைகளை ஆரம்பித்திருந்தது. நாட்டின் மிக முக்கியமான டிஜிட்டல் கட்டமைப்பாக விளங்கும் The Sri Lanka Backbone Network (SLBN), இந்தச் சூழலில் மிகச்சிறந்த பின்னடைவுத் திறனை வெளிப்படுத்தியது; இதில் மிகக்குறைந்த அளவிலான இணைப்பு Nodes பாதிக்கப்பட்டதோடு, அவை 24 மணிநேரத்திற்குள்ளேயே சீரமைக்கப்பட்டன. நாட்டின் தேசிய தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்ப (ICT) தீர்வுகளை வழங்கும் நிறுவனம் என்ற வகையில், SLT- MOBITEL பிற வலையமைப்பு செயற்பாட்டாளர்கள் மற்றும் பயனர்களுக்கான இணைப்பை மீட்டெடுப்பதற்கு முன்னுரிமை அளித்தது. அதேவேளையில், தனது வாடிக்கையாளர்களுக்கும் விரிவான ஆதரவை வழங்கி, நாடு முழுவதும் மொபைல் சேவைகள் விரைவாக மீண்டும் நிறுவப்படுவதை உறுதி செய்தது SLT-MOBITEL நிறுவனத்தின் நாடளாவிய ரீதியிலான பிரதான வலையமைப்பு மிக விரைவாகச் சீரமைக்கப்பட்டமையானது, பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிலையான மற்றும் மொபைல் சேவைகள் மீளமைக்கப்படுவதை விரைவுபடுத்துவதற்கான ஒரு முக்கிய காரணியாக அமைந்தது. இந்தத் துரித நடவடிக்கையானது, SLT-MOBITEL உடன் இணைந்த ஏனைய சேவை வழங்குநர்களும் தங்களது சேவைகளை விரைவாக மீட்டெடுக்க வழிவகுத்ததுடன், நாடு தழுவிய ரீதியில் தடையற்ற தொடர்பாடலை உறுதிப்படுத்தியது. இந்த மீட்புப் பணிகளை முன்னெடுப்பதற்காக, நிர்வாகத்தின் நேரடி மேற்பார்வையின் கீழ் மத்திய கட்டுப்பாட்டு அறை (War Room) ஒன்று நிறுவப்பட்டு, நாடு முழுவதும் தொலைத்தொடர்பு வலையமைப்பைச் சீரமைக்கும் மற்றும் மறுசீரமைக்கும் பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டன. இதற்கான ஆரம்பகட்ட மதிப்பீடுகளின்படி, வலையமைப்பு மீட்பு மற்றும் மேம்படுத்தல் செலவுகள் சுமார் 5 முதல் 6 பில்லியன் ரூபாய் வரை இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான இணைப்பு Nodes, சேதமடைந்த Fibre வழித்தடங்கள் மற்றும் வௌ்ளத்தில் மூழ்கிய தொலைத்தொடர்புப் Cabinets களை சீரமைப்பதற்காக SLT- MOBITEL குழுவினர் இரவு பகலாகப் பணியாற்றினர். Fibre உட்கட்டமைப்புகள் கடுமையாகச் சேதமடைந்த பகுதிகளில், தற்காலிக நிலையான வயர்லெஸ் அணுகல் (FWA) வசதிகளை நிறுவனம் ஏற்படுத்தியது. இதன் மூலம் பொதுமக்கள், அவசரகால மீட்புப் பணியாளர்கள் மற்றும் அத்தியாவசியச் சேவையாளர்கள் தடையின்றித் தொடர்பில் இருக்க வழிவகை செய்யப்பட்டது. மேலும், அவசரகாலச் சூழலில் நாட்டின் முக்கியமான செயல்பாடுகள் தொடர்ந்து நடைபெறுவதை உறுதிசெய்யும் நோக்கில், மருத்துவமனைகள், அரச முகவர் நிலையங்கள் மற்றும் கூட்டாண்மை வாடிக்கையாளர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் சேவைகள் மீட்டமைக்கப்பட்டன.
SLT-MOBITEL நிறுவனம், கொழும்பு பல்கலைக்கழகத்துடன் இணைந்து ‘247 தேசிய மருத்துவ உதவி எண்ணை’ (National Medical Helpline) அறிமுகப்படுத்தியது. இது பாதிக்கப்பட்டவர்களுக்கு 24 மணிநேரமும் சேவையாற்றும் பிரத்யேகத் திட்டமாகும். இந்தச் சேவை தொடங்கப்பட்ட முதல் வாரத்திலேயே ஏராளமான அழைப்புகள் வந்தன; இதன் மூலம் காயங்கள், தொற்றுநோய்கள், நீரினால் பரவும் நோய்கள் மற்றும் ஏனைய உடல்நலக் கோளாறுகளை எதிர்கொண்ட நபர்களுக்கு உடனடி மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டன. SLT-MOBITEL நிறுவனத்தின் தேசிய இணைப்பு உட்கட்டமைப்பு மற்றும் கொழும்பு பல்கலைக்கழகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட மருத்துவ நிபுணர்கள் குழு ஆகியோரின் ஒருங்கிணைப்பில் இந்தச் சேவை இயங்கியது. இடர்க்காலங்களில் மற்றும் அதிலிருந்து மீண்டுவரும் வேளைகளில், மீள்திறன் கொண்ட உட்கட்டமைப்பு மற்றும் மக்கள் நலனை மையமாகக் கொண்ட தொடர்பாடல் மூலம் இலங்கையர்களுக்கு ஆதரவளிக்க நிறுவனம் கொண்டுள்ள உறுதிப்பாட்டை இந்தத் திட்டம் வெளிப்படுத்தியது. மிக முக்கியமாக, இந்தச் சேவையானது அனைத்து தொலைத்தொடர்பு வலையமைப்புகளுக்கும் பொதுவானதாக வழங்கப்பட்டதால், நாடளாவிய ரீதியில் எவரும் மருத்துவ உதவியைப் பெறுவதிலிருந்து புறக்கணிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தேசிய பேரிடர் மீட்பு நடவடிக்கைகளுக்கான தகவல் தொடர்புத் தீர்வு வழங்குநராகச் செயல்பட்ட SLT- MOBITEL, பாதுகாப்பு அமைச்சுடன் இணைந்து நெருக்கமாகப் பணியாற்றியது. இலங்கை இராணுவத்தின் ஆதரவுடன், களப்பணியாளர்கள் பாதிக்கப்பட்ட இடங்களை விரைவாகச் சென்றடைந்தனர்; இது மிகவும் சவாலான நிலப்பரப்புகளிலும் விரைவான பழுதுபார்ப்புப் பணிகளை மேற்கொள்ளவும், பாதுகாப்பான செயல்பாடுகளை உறுதிப்படுத்தவும், சேவைகளை மீளமைக்கவும் வழிவகை செய்தது. இந்த வெற்றிகரமான கூட்டுமுயற்சியானது தேசிய பாதுகாப்பு, அவசரகால ஒருங்கிணைப்பு மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு ஆகியவற்றில் தொலைத்தொடர்புத் துறையின் முக்கிய பங்கை எடுத்துக்காட்டியதுடன், இராணுவத்தின் பங்களிப்பிற்கு நிறுவனம் தனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது.
வலையமைப்புச் சீரமைப்புப் பணிகளுக்கு மேலதிகமாக, SLT-MOBITEL பல்வேறு அரச நிறுவனங்களுக்கு தேசிய அளவிலான முக்கியமான ஆதரவை வழங்கியதோடு, பேரிடர் காலப்பகுதியில் அத்தியாவசிய பொதுச் சேவைகள் தடையின்றி நடைபெறுவதை உறுதி செய்தது. வழங்கப்பட்ட இந்தச் சேவைகளின் விளைவாக, அந்த முக்கிய தேசிய நிறுவனங்கள் எவ்வித இடையூறுமற்ற செயல்பாடுகளையும் நம்பகமான தகவல் தொடர்பு இணைப்பையும் பெற்றுக்கொண்டன.
புயல் தாக்கம் ஏற்பட்டு ஒரு வாரத்திற்குள்ளேயே, பாதிக்கப்பட்டிருந்த பகுதிகளில் 98 சதவீதத்திற்கும் அதிகமான தகவல் தொடர்புத் தளங்களை SLT-MOBITEL வெற்றிகரமாகச் சீரமைத்தது. மிகக்கடுமையாகப் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள ஒரு சில இடங்கள் மட்டுமே, அந்தப் பகுதிகளுக்குச் செல்வதற்கான அனுமதி கிடைத்தவுடன் சீரமைக்கப்பட வேண்டிய நிலையில் உள்ளன. மனிதவளப் பற்றாக்குறை மற்றும் சுற்றுச்சூழல் ரீதியான சவால்களுக்கு மத்தியிலும், தனிப்பட்ட வாடிக்கையாளர் இணைப்புகள் மற்றும் எஞ்சியிருக்கும் இணைப்பு Nodesகளை சீரமைக்கும் பணிகளை நிறுவனம் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றது. இந்த மீட்புக் காலம் முழுவதும் வாடிக்கையாளர்கள் வெளிப்படுத்திய பாராட்டுக்குரிய பொறுமையும் புரிந்துணர்வும், சீரமைப்புப் பணிகளைச் சிறப்பாகச் செய்ய பெரும் ஆதரவாக அமைந்தன இந்த பேரிடரானது, நீண்ட கால தேசிய அளவிலான வலையமைப்பு மீள்திறனின் அவசியத்தை வலியுறுத்தியுள்ளது. அதிக ஆபத்துள்ள பகுதிகளில் ஃபைபர் வழித்தடங்களை நிலத்தடிக்கு மாற்றும் பணிகளை விரைவுபடுத்துதல், பாலங்களில் உள்ள வழித்தடக் குழாய்களைப் (Bridge ducts) பயன்படுத்துவதில் முன்னுரிமை அளித்தல் மற்றும் அவசரகாலங்களில் மின்சாரத்தை மீளமைப்பதற்கான துரிதப்படுத்தப்பட்ட நடைமுறைகளை உருவாக்குதல் ஆகியவற்றை SLT-MOBITEL வலியுறுத்துகிறது.
அத்துடன், செப்பு அடிப்படையிலான (Copper-based) தகவல் தொடர்பு வலையமைப்புகளை fibre தொழில்நுட்பத்திற்கு மாற்றும் பணிகளையும் நிறுவனம் முன்னெடுத்து வருகின்றது இலங்கையின் தேசிய தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்ப (ICT) தீர்வுகளை வழங்கும் நிறுவனம் என்ற வகையில், ஒவ்வொரு நெருக்கடியான காலகட்டத்திலும் நாட்டைத் தடையின்றி இணைந்திருக்கச் செய்ய SLT-MOBITEL உறுதியபூண்டுள்ளது. துரிதப்படுத்தப்பட்ட இந்த மீட்பு நடவடிக்கைகள், அரச நிறுவனங்களுடனான ஒருங்கிணைந்த ஆதரவு மற்றும் பொதுச் சேவைக்கான அர்ப்பணிப்பு ஆகியன, வணிக ரீதியிலான செயல்பாடுகளுக்கு அப்பால் நாட்டின் ‘நம்பகமான டிஜிட்டல் வாழ்வாதாரம்’ எனும் தனது பொறுப்பை நிறுவனம் மீண்டும் நிலைநாட்டியுள்ளதை உறுதிப்படுத்துகின்றன.

