விளையாட்டு
ஐசிசி தரவரிசையில் முதல் இடம் பிடித்த விராட் கோலி!

Jan 14, 2026 - 04:19 PM -

0

ஐசிசி தரவரிசையில் முதல் இடம் பிடித்த விராட் கோலி!

இந்தியா - தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணிகள் இடையே 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்றது. இதில் இந்திய அணி 2 - 1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி அசத்தியது. 

இந்த தொடரில் 2 சதம் மற்றும் ஒரு அரைசதத்துடன் மொத்தம் 302 ஓட்டங்களை குவித்து அசத்திய விராட் கோலி தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். 

இதனையடுத்து நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 93 ஓட்டங்களை குவித்து ஆட்டநாயகன் விருதை வென்றார். 

இந்நிலையில் ஒருநாள் துடுப்பாட்ட வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. 

இதில் துடுப்பாட்ட வீரர்கள் தரவரிசையில் இந்திய வீரர் விராட் கோலி (785 புள்ளிகள்) முதலிடத்தை பிடித்துள்ளார். கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு பிறகு ஒருநாள் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் கோலி முதலிடம் பிடித்துள்ளார். 

முதலிடத்தில் இருந்து ரோகித் 2 இடங்கள் சறுக்கி 3 ஆம் இடம் பிடித்துள்ளார். நியூசிலாந்து வீரர் டேரில் மிட்செல் (784 புள்ளிகள்) 2 இடம் பிடித்துள்ளார். இப்ராஹிம் சத்ரன் 4 ஆவது இடத்திலும் சுப்மன் கில் 5 ஆவது இடத்திலும் உள்ளனர்.

Comments
0

MOST READ
01
02
03
04
05