Jan 14, 2026 - 05:35 PM -
0
"முழு நாடும் ஒன்றாக" தேசிய செயற்பாடு - விற்கின்ற அடிமையான அனைவருக்குமான அறிவித்தல் "அகன்று செல்" எனும் தொனிப் பொருளினையும், முறைப்பாட்டு தொலைபேசி இலக்கம் 1818 இனையும் உள்ளடக்கிய வகையில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் (Sticker) முச்சக்கர வண்டிகளில் ஒட்டும் ஆரம்ப நிகழ்வினை இன்று (14) மாவட்டச் செயலகம் வளாகத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபாலவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் கடற்றொழில் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகர், வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், பாராளுமன்ற உறுப்பினர்களான ஜெயசந்திரமூர்த்தி றஜீவன், கருணநாதன் இளங்குமரன், சண்முகநாதன் சிறிபவானந்தராஜா, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி சிறிவர்த்தன, அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் ஆகியோரும் பங்குபற்றி விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை (Sticker) முச்சக்கர வண்டிகளில் ஒட்டினார்கள்.
--

