சினிமா
அல்லு அர்ஜுனின் அடுத்த படத்தை இயக்கும் லோகேஷ் கனகராஜ்

Jan 14, 2026 - 05:48 PM -

0

அல்லு அர்ஜுனின் அடுத்த படத்தை இயக்கும் லோகேஷ் கனகராஜ்

'புஷ்பா-2' படத்தை தொடர்ந்து இயக்குநர் அட்லி இயக்கத்தில் சயின்ஸ்பிக்ஷன் படத்தில் நடித்து வருகிறார் அல்லு அர்ஜுன். இப்படத்தை தொடர்ந்து அல்லு அர்ஜுன் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார். 

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்க உள்ள இப்படத்தின் படப்பிடிப்பு இந்தாண்டு தொடங்கும் என்று படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். 

அல்லு அர்ஜுனின் 23 ஆவது படமாக இப்படம் உருவாகிறது. இயக்குநர் லோகேஷ் கனகராஜ், நடிகர் சூர்யாவுக்கு சொன்ன 'இரும்புக் கை மாயாவி' கதையில் தான் தற்போது அல்லு அர்ஜுன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது.

Comments
0

MOST READ
01
02
03
04
05