சினிமா
அண்ணன் தம்பின்னு நடிச்சிட்டு நடுரோட்ல விட்ருவாங்க!

Jan 14, 2026 - 06:17 PM -

0

அண்ணன் தம்பின்னு நடிச்சிட்டு நடுரோட்ல விட்ருவாங்க!

இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகி இன்று வெளியான படம் தான் வா வாத்தியார். பல வருடங்களாக இப்படம் வருமா வராதா என்ற கேள்வி எழுந்து வந்த நிலையில், நடிகர் கார்த்தி, க்ரித்தி ஷெட்டி நடிப்பில் இன்று ஜனவரி 14 ஆம் திகதி ரிலீஸாகி மிகப்பெரிய வரவேற்பை விமர்சனத்தையும் பெற்று வருகிறது. 

இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று (13) நடைபெற்றுள்ளது. அப்போது பேசிய ஞானவேல் ராஜா, 

சில படங்கள் சரியாக போகாத காரணத்தால் நிறைய அவதூறு பரப்பினார்கள், ஞானவேல்ராஜா எங்கேயும் போகவில்லை. இங்கேதான் இருக்கிறேன். 

எனக்கு கடன் இருக்கிறது என்று சொல்கிறார்கள், ஆனால் கடனே இல்லாத தயாரிப்பாளர் நான் தான். எல்லோருக்கும் வாழ்க்கையில் பிரச்சனை வரும். அந்நேரத்தில் யார், உடன் நிற்கிறார்கள் என்பதுதான் முக்கியம். 

பிரச்சனை வந்தால் மேடையில் அண்ணன், தம்பி என்று அழுதுவிட்டு, பின் நடுரோட்டில் விட்டுவிடுவார்கள். ஆனால் சூர்யா அப்படியில்லை. என் கஷ்ட காலத்தில் உண்மையிலேயே துணையாக நின்றவர் அவர் என்று கூறியிருக்கிறார். 

ஏற்கனவே மிஸ்டர் லோக்கல் படத்தின் தோல்விக்கு பின் ஞானவேல் ராஜாவுக்கும் சிவகார்த்திகேயனுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனைகள் எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான். 

அந்த அனுபவத்தைத்தான் ஞானவேல் ராஜா மறைமுகமாக அண்ணன், தம்பின்னு சொல்லி அழுவார்கள் என்று கூறியிருக்கிறாரா? என்ற கேள்வி எழுந்து வருகிறது.

Comments
0

MOST READ
01
02
03
04
05