செய்திகள்
டி-20 உலக கிண்ண உத்தியோகபூர்வ வானொலிப் பங்காளராக FM தெரண

Jan 14, 2026 - 10:08 PM -

0

டி-20 உலக கிண்ண உத்தியோகபூர்வ வானொலிப் பங்காளராக FM தெரண

2026 ஆம் ஆண்டுக்கான இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரின் இலங்கையின் உத்தியோகபூர்வ வானொலிப் பங்காளராகச் செயற்படும் வாய்ப்பு எப்.எம் தெரணவுக்கு இன்று (14) கிடைத்துள்ளது. 

எப்.எம் தெரண பெற்றுள்ள இந்தச் சிறந்த வாய்ப்பானது, அதன் பெருமைக்குரிய பயணத்தில் மற்றுமொரு தீர்மானமிக்க மைல்கல்லாகும். 

இது தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பு இன்று (14) கொழும்பிலுள்ள இலங்கை சுற்றுலாச் சபையின் 'Sea Festival' மண்டபத்தில் நடைபெற்றது. 

கடந்த 2011ஆம் ஆண்டு நடைபெற்ற ICC உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் உத்தியோகபூர்வ ஒலிபரப்பு உரிமையைப் பெற்றுக்கொண்டதன் மூலம், நேரடி கிரிக்கெட் வர்ணனைகளைத் தனியார் வானொலித் துறைக்கு அறிமுகப்படுத்திய முதல் இலங்கையின் தனியார் வானொலியாக எப்.எம் தெரண திகழ்ந்தது. 

அன்று முதல் இன்று வரை, இலங்கையின் கிரிக்கெட் ஒலிபரப்புத் துறையை மிகவும் பரந்த, போட்டித்தன்மை வாய்ந்த மற்றும் ரசிகர்களை மையப்படுத்திய ஒரு அனுபவமாக மாற்றுவதற்கு எப்.எம் தெரண விசேட பங்களிப்பை வழங்கி வருகின்றது. 

இம்முறை போட்டித் தொடரின் போது முழு நாட்டையும் உள்ளடக்கும் வகையில், ஒவ்வொரு கணத்தையும் நேரடி அனுபவங்களாகவும், இலங்கை கிரிக்கெட் ரசிகர்களுக்கே உரிய உத்வேகத்துடனும் உங்களிடம் கொண்டு சேர்க்க எப்.எம் தெரண தற்போது அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது. 

2026 ICC இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரின் 55 போட்டிகளும் FM 92.2 மற்றும் 92.4 ஆகிய அலைவரிசையூடாக நாடு முழுவதும் நேரடி ஒலிபரப்பு செய்யப்படும். 

இலங்கையின் மிகவும் மதிக்கப்படும் மற்றும் அனுபவம் வாய்ந்த கிரிக்கெட் வர்ணனையாளர் குழுவொன்று, மைதானத்தில் நடக்கும் விடயங்களை மட்டுமன்றி, அதன் பின்னாலுள்ள உற்சாகம் மற்றும் கடும் போட்டித்தன்மை ஆகியவற்றையும் ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கவுள்ளமை விசேட அம்சமாகும். 

நேரடி வர்ணனைகளுக்கு மேலதிகமாக, முன்னாள் நட்சத்திர வீரர்கள் மற்றும் நிபுணத்துவ பயிற்றுவிப்பாளர்களின் பங்கேற்புடன் கூடிய பல வானொலி மற்றும் டிஜிட்டல் நிகழ்ச்சிகளை முன்னெடுக்கவும் எப்.எம் தெரண திட்டமிட்டுள்ளது. 

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் தெரண ஊடக வலையமைப்பின் மற்றும் ஶ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் மற்றும் விளையாட்டுத் துறை வல்லுநர்கள் பலர் கலந்துகொண்டனர். 

அவர்களுள் தெரண ஊடக வலையமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் மாதவ மடவல, ஶ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் செயலாளர் பந்துல திஸாநாயக்க உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

இதேவேளை, 2026 இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரில் பங்கேற்கும் இலங்கை அணியின் உத்தியோகபூர்வ சீருடையும் இன்று மாலை கொழும்பில் அறிமுகப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Comments
0

MOST READ
01
02
03
04
05