Jan 15, 2026 - 08:12 AM -
0
தமிழர்களின் முதன்மையான பண்டிகையான தைப்பொங்கல் விழா இன்று (15) கொண்டாடப்படுகிறது. உலகெங்கும் வாழும் தமிழர்களைப் போலவே இலங்கையிலுள்ள தமிழர்களும் தைப்பொங்கல் விழாவை மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடுகின்றனர்.
செழிப்பை அளித்தமைக்காக சூரிய தெய்வத்திற்கு நன்றி தெரிவிப்பது தைப்பொங்கல் விழாவின் போது நடைபெறுகிறது. சூரிய தெய்வத்திற்கு தங்கள் முதல் அறுவடையைப் படைப்பது இதில் நிகழ்கிறது.
விவசாயத்திற்கு உதவும் விலங்குகளுக்கு மரியாதை செலுத்துவதும் இப்பண்டிகையில் நடைபெறுகிறது.
பால் கொதித்து வழியச் செய்து, அனைவருக்கும் செழிப்பு உண்டாகட்டும் என்று வேண்டுவது தைப்பொங்கல் விழாவின் முதன்மையான சடங்கு ஆகும். இந்நாள் தமிழர்களின் புதிய ஆண்டின் தொடக்கமாகவும் கருதப்படுகிறது.
அனைவருக்கும் தெரண ஊடக வலையமைப்பின் இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

