Jan 15, 2026 - 10:03 PM -
0
நாடு ஒரு புதிய யுகத்தை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில், அரசாங்கம் என்ற ரீதியில் கொள்கை மற்றும் மனப்பாங்கு ரீதியான சீர்திருத்தங்கள் மூலம் நாட்டை வழமைக்குக் கொண்டு வரும் பொறுப்பை தாம் ஏற்றுள்ளதாகப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
அலரி மாளிகையில் நடைபெற்ற தேசிய தைப்பொங்கல் விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
இது சவாலானது என்ற போதிலும் அத்தியாவசியமான ஒரு பணி என்றும் அவர் குறிப்பிட்டார்.
தைப்பொங்கல் தினத்தில் ஒற்றுமை, பரஸ்பர மரியாதை மற்றும் ஒவ்வொரு சமூகத்தினதும் கலாசார மற்றும் மத உரிமைகளைப் பாதுகாப்பதன் அடிப்படையில் அமைந்த ஒரு இலங்கையைக் கட்டியெழுப்புவதற்கு ஒன்றிணையுமாறு அனைவரிடமும் பிரதமர் இதன்போது அழைப்பு விடுத்தார்.
அத்துடன், தைப்பொங்கல் கொண்டாட்டத்தின் அடிப்படை விழுமியங்களான முயற்சி, பொறுமை மற்றும் சூழலைப் பாதுகாத்தல் போன்ற பண்புகளை முன்னிறுத்தி ஒரு நாடாக முன்னோக்கிச் செல்வதன் முக்கியத்துவத்தையும் பிரதமர் ஹரிணி அமரசூரிய வலியுறுத்தினார்.

