Jan 16, 2026 - 07:18 PM -
0
அவுஸ்திரேலியாவில் பிக் பாஷ் டி20 லீக் நடைபெற்று வருகிறது. இன்று (16) நடைபெற்ற போட்டியில் சிட்னி தண்டர் - சிட்னி சிக்சர்ஸ் அணிகள் மோதின. முதலில் துடுப்பெடுத்தாடிய சிட்னி தண்டர் 6 விக்கெட் இழப்பிற்கு 189 ஓட்டங்களை சேர்த்தது.
தொடக்க வீரராக களம் இறங்கிய அந்த அணியின் தலைவர் டேவிட் வார்னர் அபாரமாக விளையாடி 65 பந்தில் 110 ஓட்டங்களை விளாசினார். இது டி20 கிரிக்கெட்டில் அவரின் 10 ஆவது சதமாகும். இதன்மூலம் டி20 கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில் விராட் கோலியை பின்னுக்குத் தள்ளினார். விராட் கோலி 9 சதங்கள் அடித்துள்ளார்.
கிறிஸ் கெய்ல் 22 சதங்களுடன் முதலிடத்தில் உள்ளார். பாபர் அசாம் 11 சதங்களுடன் 2 ஆவது இடத்தில் உள்ளார்.
பின்னர் 190 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய சிட்னி சிக்சர்ஸ் ஸ்டீவ் ஸ்மித்தின் அதிரடி சதத்தால் (42 பந்தில் 100) 17.2 ஓவரில் இலக்கை அடைந்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

