செய்திகள்
இலங்கை - இங்கிலாந்து கிரிக்கெட் தொடர்: நுழைவுச்சீட்டு விலைகள் அறிவிப்பு

Jan 16, 2026 - 07:43 PM -

0

இலங்கை - இங்கிலாந்து கிரிக்கெட் தொடர்: நுழைவுச்சீட்டு விலைகள் அறிவிப்பு

சுற்றுலா இங்கிலாந்து அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையில் நடைபெறவுள்ள மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கிரிக்கெட் தொடருக்கான நுழைவுச்சீட்டு விலைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

சிறிலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் ஊடாக இந்த நுழைவுச்சீட்டுகளைக் கொள்வனவு செய்ய முடியும் என அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதற்கமைய, கொழும்பு ஆர். பிரேமதாச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ள ஒருநாள் தொடருக்கான நுழைவுச்சீட்டு ஒன்றின் விலை 1000 ரூபா முதல் 10,000 ரூபா வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன், பல்லேகல மைதானத்தில் நடைபெறவுள்ள இருபதுக்கு-20 போட்டிகளுக்கான நுழைவுச்சீட்டு ஒன்றை 1000 ரூபா முதல் 20,000 ரூபா வரையான விலையில் பெற்றுக்கொள்ள முடியும் என சிறிலங்கா கிரிக்கெட் நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

Comments
0

MOST READ
01
02
03
04
05