Jan 16, 2026 - 09:23 PM -
0
பூஸா சிறைச்சாலையில் ஏற்பட்டிருந்த அமைதியின்மை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
கைதிகள் குழுவொன்று இன்று (16) பூஸா சிறைச்சாலையின் D பிரிவின் கூரை மீது ஏறி, சிறைச்சாலை நிர்வாகத்திற்கு எதிராக எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதன்போது அவர்கள் வன்முறையாக நடந்துகொண்டதுடன், சொத்துக்களுக்கும் சேதம் விளைவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

