Jan 16, 2026 - 09:37 PM -
0
T-56 ரக துப்பாக்கிக்கு பயன்படுத்தும் 18 மகசீன்கள் மற்றும் 25 தோட்டாக்களை தம்வசம் வைத்திருந்த இலங்கை இராணுவத்தின் ஓய்வுபெற்ற கெப்டன் ஒருவர், மினுவாங்கொடை - மிரிஸ்வத்த பிரதேசத்தில் வைத்து இன்று (16) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவினரால் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

