Jan 17, 2026 - 09:39 AM -
0
உழவு இயந்திரம் ஒன்று வீதியை விட்டு விலகி கவிழ்ந்த விபத்தில், அதன் சாரதி காயமடைந்து பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.
மடுல்சீமை - பசறை வீதியில் மாளிகாதென்ன நோக்கிச் செல்லும் கிளை வீதியின் சரிவான பகுதியொன்றில் நேற்று (16) காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் உயிரிழந்தவர் 43 வயதுடைய வெரல்லபதன, மடுல்சீமை பிரதேசத்தைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

