Jan 17, 2026 - 08:46 PM -
0
68 இலட்சத்து 85 ஆயிரம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகள் மற்றும் மின்னணு சிகரெட்டுகளுடன் இலங்கைப் பயணி ஒருவர் இன்று (17) கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் பாணந்துறை பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞராவார்.
சந்தேகநபர் இன்று (17) மாலை 5.00 மணியளவில் டுபாயிலிருந்து எமிரேட்ஸ் விமான சேவைக்குச் சொந்தமான EK-654 என்ற விமானம் மூலம் நாட்டிற்கு வருகை தந்துள்ளார்.
இதன்போது, அவர் தனது 3 பயணப் பொதிகளுக்குள் 44,400 வெளிநாட்டு சிகரெட்டுகள் அடங்கிய 222 சிகரெட் கார்ட்டூன்களையும் 15 மின்னணு சிகரெட்டுகளையும் மறைத்து வைத்திருந்த போதே இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் அவரைத் தமது பொறுப்பில் வைத்து இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

