Jan 18, 2026 - 04:26 PM -
0
பரபரப்பான பொங்கல் பொக்ஸ் ஆபிஸ் மோதலில், ஜீவாவின் 'தலைவர் தம்பி தலைமையில்' திரைப்படம் பார்வையாளர்களைக் கவர்ந்து, முக்கிய போட்டியாளர்களைப் பின்னுக்குத் தள்ளி தெளிவான முன்னிலையை பெற்றுள்ளது.
சிவகார்த்திகேயனின் 'பராசக்தி' மற்றும் கார்த்தியின் 'வா வாத்தியார்' போன்ற பெரிய படங்கள் களத்தில் இருந்தபோதிலும், இந்த படம் கிராமத்து அரசியலை மையப்படுத்திய நகைச்சுவை திரைப்படமாகும்.
பண்டிகைக் காலப் போட்டிகளுக்கு இடையிலும் சிறந்த கதையுள்ள திரைப்படம் வெற்றி பெறும் என்பதற்கு இந்த படம் ஒரு உதாரணமாக அமைந்துள்ளது.
ஜனவரி 15 அன்று வெளியான இப்படம் அமோகமான தொடக்கத்தைப் பெற்றுள்ளது.
வெளியான முதல் மூன்று நாட்களிலேயே, உலகம் முழுவதும் சுமார் 11.7 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இதில் இந்தியாவில் 11.7 கோடி ரூபாயும் வெளிநாடுகளில் 35 லட்சம் ரூபாயும் வசூலாகியுள்ளது. 10 கோடி ரூபாய் என்ற சிறிய பட்ஜெட்டில் உருவான இப்படத்திற்கு கிடைத்துள்ள இந்தச் சிறப்பான வரவேற்பு, இதை ஒரு மாபெரும் வெற்றிப் படமாக (Blockbuster) மாற்றியுள்ளது.
இது ஜீவா உள்ளிட்ட குழுவினருக்கும் மேலும் மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

