Header Logo
Mogo Academy

கிழக்கு
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பணி பகிஷ்கரிப்பு

Jan 19, 2026 - 12:41 PM -

0

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பணி பகிஷ்கரிப்பு
Mobitel inner

கிழக்கு மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளில் இன்று (19) தொடக்கம் வைத்தியர்கள் பணிபகிஸ்கரிப்பினை முன்னெடுத்துள்ளதன் காரணமாக வைத்திய சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வைத்தியசாலைக்கு வருகைதந்த மக்கள் பல்வேறு கஷ்டங்களை எதிர்நோக்கினார்கள். 

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகரை பதவி நீக்கம் செய்து பக்கச்சார்பற்ற விசாரணையினை முன்னெடுக்குமாறு கோரி தொடர்ச்சியான போராட்டங்கள் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவந்த நிலையில் இன்று (19) பணி பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

வைத்தியர்களின் பணி பகிஷ்கரிப்பு காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் வைத்திய சேவைகள் கடும் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளதை காணமுடிகின்றது. 

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் ஆரம்ப வைத்திய சேவை பிரிவு மற்றும் கிளினிக் சேவைகளில் வைத்தியர்கள் வருகைதராத காரணத்தினால் பல்வேறு பகுதிகளிலும் இருந்து வருகைதந்த மக்கள் பல்வேறு கஷ்டங்களை எதிர்நோக்கியதை காணமுடிந்தது. 

இன்று காலை முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ள போராட்டம் தமது கோரிக்கைக்கான சாதகமான தீர்வு கிடைக்கும் வரையில் போராட்டம் தொடரும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட கிளையினர் தெரிவித்துள்ளனர்.

--

MOST READ

காணொளி
செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

Mobitel Upahara