Jan 21, 2026 - 09:57 AM -
0
செலிங்கோ லைஃப் மீண்டும் ஒருமுறை சிறப்பான செயல்திறனை மறக்கமுடியாத அனுபவங்களாக மாற்றி, இலங்கையின் ஆயுள் காப்புறுதித்துறையில் சிறப்புத் தரத்துக்கும் ஊழியர் பாராட்டுக்கும் அளவுகோலாக தன்னை நிலைநிறுத்தியுள்ளது. அதன் உச்ச சாதனையாளர்களை, கொண்டாட்டம், ஒற்றுமை மற்றும் உரிய மகிழ்ச்சியை ஒருங்கிணைக்கும் விதமான பிரத்தியேக வெளிநாட்டு சுற்றுலா பயணங்களின் மூலம் பாராட்டி கௌரவித்துள்ளது.
2025 ஆம் ஆண்டு நிறைவடைந்த நிலையில், 27 முன்னணி சாதனையாளர்கள் தாய்லாந்துக்கு மூன்று இரவுகள், நான்கு பகல்கள் கொண்ட உற்சாகமான சுற்றுலா பயணத்தை மேற்கொண்டனர். அங்கு அவர்கள் Grand Palace மற்றும் Emerald பௌத்த விகாரை ஆகியவற்றின் பிரமாண்டத்தைக் கண்டுகளித்து, Dream World-இல் சாகச அனுபவங்களை ரசித்து, இரவுநேர உணவை கட்டல் ஒன்நில் மேல்தளத்தில் இயுவுடன் அனுபவித்தனர். இதேவேளை, மேலும் 14 முன்னணி விற்பனை நட்சத்திரங்கள் மலேசியாவின் சிறப்புகளை அனுபவிக்கும் வாய்ப்பைப் பெற்றனர். Genting Highlands-இன் குளிரான மலை பிரதேசத்தில் மற்றும் அதன் வெளிப்புற தீம் பார்க், அழகிய கேபிள் கார் பயணங்கள், Batu Caves மற்றும் Petronas Twin Towers போன்ற புகழ்பெற்ற இடங்களுக்கான சுற்றுப்பயணங்கள், நினைவில் நிற்கும் உணவு அனுபவங்கள் ஆகியவை நான்கு நட்சத்திர ஹோட்டல் தங்குமிட வசதியுடன் இணைந்து இந்தப் பயணத்தை மேலும் சிறப்பாக்கின.
இந்தப் பயணங்கள், உலகத் தரமான அனுபவங்களின் மூலம் சிறப்பான செயல்திறனை கொண்டாடும் செலிங்கோ லைஃப் நிறுவனத்தின் பெருமைக்குரிய பாரம்பரியத்தின் ஒரு பகுதியாகும். இவ்வருடத்தின் ஆரம்பத்தில், முன்னணி விற்பனை சாதனையாளர்கள் மலேசியா, துபாய் மற்றும் துருக்கி ஆகிய நாடுகளுக்கு அனைத்து செலவுகளும் ஏற்றுக்கொள்ளப்பட்ட சுற்றுலா பயணங்களின் மூலம் பாராட்டப்பட்டனர். இந்தப் பயணங்களில் புகழ்பெற்ற நினைவுச்சின்னங்கள், பண்பாட்டு பாரம்பரியம் மற்றும் நவீன அதிசயங்களை வெளிப்படுத்தும் ஆழமான பயணத் திட்டங்கள் இடம்பெற்றிருந்தன. இச்சுற்றுலா பயணங்கள் தனிநபர் மற்றும் குழு சாதனைகளை அங்கீகரிப்பதோடு மட்டுமல்லாமல், வலுவான உறவுகளை உருவாக்கவும், உற்சாகத்தை புதுப்பிக்கவும், உலகளவில் வெற்றியை கொண்டாடவும் உதவுகின்றன என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
வெறும் விடுமுறை பயணங்களாக மட்டுமல்லாது, இந்தச் சுற்றுலா அனுபவங்கள் சிறப்பை மதிக்கும் செலிங்கோ லைஃப் நிறுவனத்தின் ஆழமாக பதியப்பட்ட பண்பாட்டை பிரதிபலிக்கின்றன. கனவுகளை வாய்ப்புகளாகவும், சாதனைகளை ஊக்கமளிக்கும் அனுபவங்களாகவும் மாற்றும் இந்த அணுகுமுறை குறிப்பிடத்தக்கது. ஆயுள் காப்புறுதித் துறையில் சுறுசுறுப்பானதும் பலன் தருவதுமான ஒரு தொழில் வாழ்க்கையை நாடுபவர்களுக்கு, செலிங்கோ லைஃப் தொழில்முறை முன்னேற்றத்துடன் மட்டுமல்லாமல், வெற்றி பெறும் அணியின் ஒரு பகுதியாக பாராட்டப்பட்டு ஊக்கமளிக்கப்படும் வாய்ப்பையும் வழங்குகிறது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
செயல்திறனைப் பரிசளிப்பதற்குப் பின்னரும், இந்த முயற்சிகள் ஊழியர் வர்த்தகநாமத்தை ஊக்குவித்து, தற்போதைய மற்றும் எதிர்கால ஊழியர்கள் நிறுவனத்தை ஒரு பணியிடமாக எவ்வாறு பார்ப்பார்கள் என்பதை மூலோபாய ரீதியில் வடிவமைக்கின்றன. மேலும், நிறுவனத்தின் பெறுமதிகள், பண்பாடு மற்றும் நோக்கத்தின் உண்மையான வர்த்தகநாம தூதுவர்களாக ஊழியர்களை மாற்றுகின்றன, என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

