Jan 21, 2026 - 10:04 AM -
0
டோக்கியோ சீமெந்து குழுமத்தின் முன்னணி வர்த்தக நாமமான டோக்கியோ சுப்பர் சீமெந்து, தரம், புத்தாக்கம் மற்றும் வினைத்திறன் சிறப்பு போன்வற்றுக்கான சிறந்த அர்ப்பணிப்புக்காக 2025 ஆம் ஆண்டுக்கான பெருமைக்குரிய SUPERBRANDS அந்தஸ்த்தை பெற்றுள்ளது. சந்தையில் காணப்படும் மிகவும் பெறுமதி வாய்ந்த மற்றும் வலிமையான வர்த்தக நாமங்களின் சிறந்த வர்த்தக நாம கதைகளைக் கொண்டாடும் வகையில், அண்மையில் நடைபெற்ற விருதுகள் வழங்கும் வைபவத்தின் போது, இந்த கௌரவிப்பு டோக்கியோ சுப்பருக்கு வழங்கப்பட்டிருந்தது.
உயர்தரத் தரநிலைகள் மற்றும் செயல்திறனை அடிப்படையாகக் கொண்டு உற்பத்தி செய்யப்பட்டுள்ள டோக்கியோ சுப்பர், கட்டுமானத் துறையில் ஒரு புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் மிகவும் பிரபலமான சீமெந்து வர்த்தகநாமமான டோக்கியோ சுப்பர் OPC மற்றும் சந்தையிலுள்ள மிகவும் சூழல்நேயம் மிக்க சீமெந்து வர்த்தகநாமமான டோக்கியோ சுப்பர் BHC ஆகிய பெயர்களில் இது நுகர்வோரை சென்றடைகிறது. 2025 ஆம் ஆண்டின் SUPERBRANDS 2025 எனும் உயர்ந்த அந்தஸ்தைப் பெற்ற ஒரே சீமெந்து வர்த்தகநாமம் டோக்கியோ சுப்பர் ஆகும். மேலும், Waterproofers தயாரிப்புகள், Wall plasters தயாரிப்புகள், Mortars தயாரிப்புகள் மற்றும் சந்தையில் முன்னணியிலுள்ள Tile adhesives கள் உள்ளிட்ட நவீன கட்டுமான தீர்வுகளையும் டோக்கியோ சுப்பர் வழங்கி வருகின்றது.
நாட்டின் நன்மதிப்பைப் பெற்ற வர்த்தகநாமங்களில் ஒன்றாகத் திகழும் டோக்கியோ சுப்பர், இலங்கையின் முன்னேற்றத்துடன் நெருங்கிய தொடர்புடைய டோக்கியோ சீமெந்து குழுமத்தினால் சந்தைப்படுத்தப்படுகிறது. கடந்த 44 ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டின் கட்டுமானத் துறையில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தி வரும் இக்குழுமம் பெற்றுள்ள பல கௌரவமான விருதுகளின் வரிசையில், SUPERBRANDS அங்கீகாரம் சமீபத்திய இணைப்பாகும். இலங்கையில் பொதுப் பட்டியலிடப்பட்ட ஒரே சீமெந்து உற்பத்தியாளரான டோக்கியோ சீமெந்து குழுமம், சீமெந்து, ரெடி-மிக்ஸ் கொன்கிறீட் மற்றும் சீமெந்து அடிப்படையிலான உலர் கலவை தயாரிப்புகளில் சந்தை முன்னணியில் உள்ளது. நாட்டின் அடையாளச் சின்னங்களாகத் திகழும் பாரிய கட்டுமானங்கள் மற்றும் உட்கட்டமைப்புத் திட்டங்களுக்கு உயர்தர சீமெந்து மற்றும் கொன்கிறீட்டை விநியோகிப்பதன் மூலம், தேசத்தைக் கட்டியெழுப்புவதில் ஒரு நம்பகமான பங்காளியாக டோக்கியோ சீமெந்து குழுமம் தனது சந்தை ஆதிக்கத்தை உறுதிப்படுத்தியுள்ளது.
லண்டனை அடிப்படையாகக் கொண்ட Superbrands Worldwide இன் உள்நாட்டு பிரதிநிதியாக SUPERBRANDS Sri Lanka திகழ்கிறது. 90 க்கும் மேற்பட்ட நாடுகளில் மாபெரும் சுயாதீன வர்த்தகநாமங்களின் அங்கீகாரத்தை தீர்மானிக்கும் உயர்மட்ட அமைப்பாக திகழ்கிறது.
வர்த்தகநாமமிடல், விளம்பரம், சந்தைப்படுத்தல், வடிவமைப்பு, தயாரிப்பு மேலாண்மை, மக்கள் தொடர்பு மற்றும் வணிக மேலாண்மை ஆகிய துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் மற்றும் துறைசார் வல்லுநர்களைக் கொண்ட ஒரு சுயாதீனக் குழுவினால் சூப்பர் பிராண்ட்ஸ் தெரிவு செய்யப்படுகின்றது. இந்தத் தரவரிசையில் மிக உயர்ந்த மதிப்பீட்டைப் பெறும் வர்த்தகநாமங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் SUPERBRANDS அந்தஸ்து வழங்கப்படுவதுடன், இந்தத் திட்டத்தில் இணைந்துகொள்ள அழைப்பு விடுக்கப்படுகிறது. இது ஒரு வர்த்தகநாமத்தின் மதிப்பையும் கௌரவத்தையும் அதிகரிப்பதோடு, ஏனைய போட்டியாளர்களிடமிருந்து அதனைத் தனித்துவப்படுத்திக் காட்டுகின்றது.

