Jan 21, 2026 - 10:15 AM -
0
கொமர்ஷல் வங்கியானது வாடிக்கையாளர்களின் வசதியை மேம்படுத்தி, சிறப்பான பெறுமதியை வழங்கும் தனது உறுதிப்பாட்டை மேலும் வலுப்படுத்தும் வகையில், தனது UnionPay கடனட்டைகள் தொகுப்பில் ஒரு உயர்தர சேர்க்கையாக UnionPay SplendorPlus அட்டையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த அட்டையானது குறிப்பாக சீனாவின் மெயின்லாந்திற்கு பயணம் செய்யும் இலங்கை பயணிகளுக்கு தடையற்றதும், மிகச் செலவு குறைந்ததுமான கொடுப்பனவு அனுபவத்தை வழங்கும் நோக்கில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
UnionPay International (UPI) உடன் இணைந்து உருவாக்கப்பட்ட இந்த புதிய அட்டையானது, புதுமையான மற்றும் பெறுமதி சேர்க்கும் கொடுப்பனவுத் தீர்வுகளை வழங்குவதில் நாட்டின் முன்னணி வங்கியாக கொமர்ஷல் வங்கியின் நிலைப்பாட்டை மேலும் வலுப்படுத்துகிறது. அதே நேரத்தில், சீனா இலங்கையர்களுக்கான முக்கியமான வர்த்தக மற்றும் ஓய்வுப் பயண இலக்குகளில் ஒன்றாக வேகமாக உருவாகி வரும் சூழலில், இந்த அட்டையின் அறிமுகம் மிகச் சரியான காலகட்டத்தில் இடம்பெற்றுள்ளது.
UnionPay SplendorPlus அட்டைக்கான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்ட நிகழ்வில், கொமர்ஷல் வங்கியை பிரதிநிதித்துவப்படுத்தி, முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான திரு. சனத் மனதுங்க, பிரதம செயற்பாட்டு அதிகாரியான திரு. எஸ். பிரபாகர், தனிநபர் வங்கி சேவைகள் பிரிவின் பிரதிப்பொது முகாமையாளர் திரு. எஸ். கணேஷன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
China UnionPay மற்றும் UnionPay International நிறுவனங்களின் தலைவர் திரு. டொங் ஜுன்ஃபெங் தலைமையிலான UnionPay பிரதிநிதிகள் குழுவில் அவருடன், China UnionPay Merchant Services Payment Inc.நிறுவனத்தின் தலைவர் திரு. ஷாவ் குவோயி மற்றும் UnionPay International நிறுவனத்தின் தென்கிழக்கு ஆசியப் பிராந்திய பொதுமுகாமையாளர் திரு. சாய் ஹூயிமிங் உள்ளிட்ட UPI நிறுவனத்தின் சிரேஷ்ட அதிகாரிகளும் இணைந்திருந்தனர்.
இந்தப்பங்குடைமை தொடர்பாக, கொமர்ஷல் வங்கியின் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்றதிகாரியுமான திரு. சனத் மனதுங்க தெரிவிக்கையில் SplendorPlus அட்டையின் அறிமுகமானது விரைவாக உலகமயமாக்கப்பட்டு வரும் வாடிக்கையாளர் தளத்திற்கு மேம்பட்ட கொடுப்பனவுத் தீர்வுகளை வழங்க வங்கியின் தயார்நிலையை நிரூபிக்கிறது என்று கூறினார். வெளிநாடுகளுக்குச் செல்லும் இலங்கை பயணிகளுக்கு சேவை செய்வதில் இரு நிறுவனங்களின் நீண்டகால அர்ப்பணிப்பை இந்தப் புதிய அட்டை பிரதிபலிக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த ஒத்துழைப்பானது, இலங்கையின் அட்டைச் சந்தையில் முன்னணியில் கொமர்ஷல் வங்கியின் நிலையை உயர்த்துகிறது. டிஜிட்டல் கொடுப்பனவுகள் தினசரி பரிவர்த்தனைகளில் ஆதிக்கம் செலுத்தும் சீனாவின் பிரதான நிலப்பகுதிக்கு பயணம் செய்யும் போது, எமது அட்டைதாரர்களுக்கு உண்மையான நிதி நன்மைகளை வழங்குவதற்காக SplendorPlus அட்டை வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ஒரு நம்பகமான மற்றும் பலனளிக்கும் பயணத் துணையாகச் செயல்படும், ஒவ்வொரு கொள்முதலையும் எளிமையாகவும், பாதுகாப்பாகவும், செலவு குறைந்ததாகவும் மாற்றும். தலைவர் டோங் ஜுன்ஃபெங்கின் கொழும்பு வருகையின் போது இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. இது UnionPay International அதன் விரிவாக்கம் மற்றும் முதற்தர தயாரிப்பு உத்திக்கு ஒரு மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த சந்தையாக இலங்கையை அங்கீகரிப்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
இலங்கையில் அமெரிக்க டொலர் 1 பில்லியனுக்கும் அதிகமான சந்தை மூலதனத்தைக் கொண்ட முதலாவது வங்கியாகவும் உலகின் தலைசிறந்த 1000 வங்கிகளின் பட்டியலில் முதன் முதலாக உள்ளடக்கப்பட்ட இலங்கையின் வங்கியாகவும் திகழும் கொமர்ஷல் வங்கி, கொழும்பு பங்குச் சந்தையில் (CSE) வங்கித் துறையில் அதிக சந்தை மூலதனத்தைக் கொண்டுள்ளது. மிகப்பெரிய தனியார் துறை கடன் வழங்குநராகவும், SME துறைக்கு மிகப்பெரிய கடன் வழங்குநராகவும், டிஜிட்டல் புத்தாக்கங்களில் முன்னணியும் வகிக்கும் கொமர்ஷல் வங்கியானது, இலங்கையின் முதலாவது 100% கார்பன்-நடுநிலை பேணும் வங்கியுமாகும். கொமர்ஷல் வங்கியானது நாடு முழுவதும் தந்திரோபாயரீதியாக அமைக்கப்பட்ட கிளைகள் மற்றும் தானியங்கி இயந்திரங்களின் வலையமைப்பைச் செயற்படுத்திவருகின்றது. மேலும், பங்களாதேஷில் 20 கிளைகள், மாலைதீவில் பெரும்பான்மையான பங்குகளைக் கொண்ட ஒரு முழுமையான Tier I வங்கி, மியான்மாரில் ஒரு நுண்நிதி நிறுவனம் என சர்வதேச ரீதியில் பரந்தளவில் தடம் பதித்த இலங்கையின் வங்கியாகத் தன்னை நிலைநிறுத்தியுள்ளது. துபாய் சர்வதேச நிதியியல் மையத்தில் (DIFC) ஒரு பிரதிநிதி அலுவலகத்தை நிறுவுவதற்கு துபாய் சர்வதேச நிதியியல் சேவைகள் அதிகாரசபையிடமிருந்து அனுமதிபெற்றதுடன் இவ் மைல்கல்லை எட்டிய இலங்கையின் முதல் வங்கியாகத் தன்னைப் பதிவுசெய்துள்ளது.
மேலும்,வங்கியின் முழுமையான உரித்துடைய துணை நிறுவனங்களான CBC Finance Ltd மற்றும் Commercial Insurance Brokers (Pvt) Limited ஆகியவையும் தங்கள் சொந்த கிளை வலையமைப்புகள் மூலம் பல்வேறு நிதிச் சேவைகளை வழங்குகின்றன.

