Jan 21, 2026 - 10:20 AM -
0
இலங்கையின் முன்னணி மின்சார வாகனத் தீர்வு வழங்குநரான Evolution Auto, 2026 ஆம் ஆண்டிற்காக நாட்டின் மிகப்பெரிய மற்றும் பன்முகத்தன்மை கொண்ட மின்சார வாகனத் தொகுப்புகளை (EV portfolio) அறிவித்துள்ளதன் மூலம், இலங்கையின் மின்சார வாகனத் துறையில் தனது தலைமைத்துவத்தை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
ஆடம்பர (Luxury), பிரீமியம், குடும்பத் தேவை, வர்த்தகம், பல்வேறு பயன்பாட்டுப் பிரிவுகள் என அனைத்து தேவைகளையும் உள்ளடக்கிய விரிவான மின்சார வாகனங்களை வழங்குவதன் மூலம், தனிப்பட்ட நுகர்வோருக்கும், பாரிய வர்த்தக பயன்பாடுகளுக்குமென பல்வேறு தேவைகளை பூர்த்தி செய்து, தூய்மையான மற்றும் நிலைபேறான போக்குவரத்தை நோக்கிய நாட்டின் பயணத்தில் Evolution Auto முன்னணியில் திகழ்கிறது. உலகின் மிகவும் மேம்பட்ட மற்றும் சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட மின்சார வாகன வர்த்தகநாமங்களை தனது தயாரிப்பு வரிசை தொகுப்பில் கொண்டுள்ளதன் மூலம், இலங்கையின் அதிகரித்து வரும் போக்குவரத்து தேவைகளுக்கு ஒரு எதிர்காலப் பங்காளராக இந்நிறுவனம் தன்னை நிலைநிறுத்தியுள்ளது.
Evolution Auto நிறுவனம் AVATR 11, IM6, IM5, XPENG G6, Riddara Active, Riddara RD6, King Long Kingwin+, KYC V7 உள்ளிட்ட 8 வெவ்வேறு மாதிரிகளை வழங்குகிறது. இதில் SUV, Smart crossovers, Sedans, மின்சார வேன்கள், Pickup வாகனங்கள் ஆகிய வாகனங்கள் உள்ளடங்குகிறது. இந்த பரந்த தெரிவுகள் இலங்கையில் மின்சார வாகனப் பயன்பாட்டை வெறுமனே ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கானதாக மட்டும் வைத்திருக்காமல், அதனை நடைமுறை சாத்தியமானதாகவும், அனைத்து தொழில்துறைகளுக்கும் ஏற்றதாகவும், வாழ்க்கை முறைகளுக்கும் ஏற்றதாகவும் மாற்றுவது தொடர்பான நிறுவனத்தின் அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகின்றன.
அது மாத்திரமன்றி, இலங்கையின் மின்சார வாகனத் துறையில் தனது நீண்டகால அர்ப்பணிப்பை உறுதிப்படுத்தும் வகையில், 2026 ஆம் ஆண்டில் மேலும் பல உலகளாவிய மாதிரிகளை அறிமுகப்படுத்தவும் புதிய பிரிவுகளில் தடம் பதிக்கவும் இந்நிறுவனம் தெளிவான திட்டங்களை கொண்டுள்ளது.
இது குறித்து Evolution Auto நிறுவனத்தின் ஆடம்பர வாகன விற்பனை பிரிவுத் தலைவர் சிர்ஹான் பெனாண்டோ தெரிவிக்கையில், "எமது நோக்கம் மின்சார வாகனங்களை அறிமுகப்படுத்துவதோடு மட்டும் நின்றுவிடவில்லை; 2026 மற்றும் அதற்குப் பின்னரான காலப்பகுதியில் இலங்கையின் போக்குவரத்து எவ்வாறு அமையப்போகிறது என்பதை வடிவமைப்பதிலேயே நாம் கவனம் செலுத்துகிறோம். நாட்டின் மிகப்பெரிய EV வாகன வரிசையை வெளியிடுவதன் மூலம், நுகர்வோர் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு நம்பிக்கை, சிறந்த தெரிவு மற்றும் தொடர்ச்சியான பேணுகையை நாம் முன்னெடுக்கிறோம். ஆடம்பர வாகனங்கள் முதல் போக்குவரத்து (Logistics) வரை, இலங்கைக்கு ஒரு நிலைபேறான மற்றும் எதிர்காலத்திற்கு ஏற்ற மின்சார வாகன சூழலை Evolution Auto உருவாக்கி வருகிறது." என்றார்.
தயாரிப்புகளின் பன்முகத்தன்மைக்கு மேலதிகமாக, வலுவான செயற்பாட்டுத் திறன், விற்பனைக்குப் பிந்தைய சேவை, உலகளாவிய உற்பத்தியாளர்களுடனான நம்பகமான பங்காளித்துவம் ஆகியன Evolution Auto நிறுவனத்தின் வெற்றிக்கு துணையாக விளங்குகின்றன. இது வாடிக்கையாளர்களுக்கு நவீன வாகனங்களை மட்டுமல்லாது, நீண்டகால நம்பகத்தன்மை, சேவைக்கான ஆதரவு மற்றும் மன அமைதி ஆகியவற்றை உறுதி செய்கிறது; இவை அனைத்தும் நாடெங்கிலும் மின்சார வாகன பயன்பாட்டை துரிதப்படுத்துவதற்கு அவசியமான காரணிகளாகும்.
தெளிவான விரிவாக்கல் திட்டம், வலுவான வர்த்தகநாம வாகன தொகுப்பைக் கொண்டுள்ள Evolution Auto, இலங்கையின் பாதுகாப்பான, புத்திசாலித்தனமான, எதிர்காலத்திற்கு ஏற்ற மின்சார வாகன பங்காளராக தன்னை நிலைநிறுத்தியுள்ளது.
மேலதிக விபரங்களுக்கு, www.evolutionauto.lk எனும் இணையதளத்தை பார்வையிடவும் அல்லது 0777 553 355 எனும் இலக்கத்தைத் தொடர்பு கொள்ளவும்.

