Jan 21, 2026 - 01:04 PM -
0
பெண்கள் மாதவிடாய் சுகாதார அணையாடை தயாரிப்புகளில் இலங்கையில் நம்பிக்கையை வென்ற நாமமாக திகழும் Fems, வெயாங்கொட, சியனே தேசிய கல்வியியல் கல்லூரியில் சுவர் ஓவியங்களை அறிமுகம் செய்துள்ளது. மாதவிடாய் சுகாதாரம் பற்றிய உரையாடல்களை வழமைப்படுத்தி, இளம் பருவத்தினருக்கும் வலுவூட்டும் செயற்பாடுகளின் ஒரு அங்கமான இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
வாழ்க்கையின் இயற்கையான ஒரு அங்கமாக மாதவிடாய் அமைந்துள்ளமையை Fems வலியுறுத்தினாலும், பழம் நம்பிக்கைகளால் இந்த நிலையை ஏற்க மறுக்கும் ஒரு தொகுதியினர் சமூகத்தில் உள்ளனர். சுவர் ஓவிய செயற்பாட்டினூடாக உரையாடல்களை மேம்படுத்தி, வழமைகளை சவால்களுக்கு உட்படுத்தி, இளைஞர்களுக்கு மாதவிடாய் சுகாதாரத்தை பின்பற்றுவதற்கு ஆதரவாக அமைந்திருக்க Fems எதிர்பார்க்கிறது.
புத்தாக்க மற்றும் கல்வியறிவூட்டும் முயற்சியாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கை, கல்லூரியின் மாணவர்கள் மற்றும் கற்பித்தலில் ஈடுபடுவோர் மத்தியில் கலந்துரையாடல்களை தூண்டும், வெளிப்படைத்தன்மை மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொதுப் பகுதியாக அமைந்திருக்கும்.
முக்கியமாக, உயர் கல்வி நிலையத்தை Fems தெரிவு செய்தமைக்கான நோக்கம், பெருமளவானோர் தமது வாழ்வில் சுயாதீனமான தீர்மானங்களை மேற்கொள்ளும் கட்டமாக இது அமைந்திருப்பதுடன், பரந்தளவு சமூகசார் மாற்றத்தை தூண்டுபவர்களாகவும் அமைந்திருப்பர் என்பதால் இந்த நடவடிக்கையை மேற்கொள்ள மிகவும் பொருத்தமானதாக அமையும் என கருதப்படுகிறது.
கல்வியியலாளர்கள் மற்றும் இளம் செல்வாக்குச் செலுத்துவோருடன் நேரடியாக தொடர்பை ஏற்படுத்தி முன்னெடுக்கப்படும் இந்தத் திட்டத்தினூடாக, மாதவிடாய் சுகாதாரம் தொடர்பான உரையாடல்களை வழமைப்படுத்துவது மற்றும் நம்பிக்கை மற்றும் உள்ளடக்கம் மிக்க கலாசாரத்தை கட்டியெழுப்பும் Fems இன் நோக்கத்திற்கு வலுச்சேர்க்கப்படுகிறது. அறிமுகத்திற்கு இரு தினங்களுக்கு முன்னதாக, மாதவிடாயுடன் தொடர்புடைய எதிர்மறையான அம்சங்களை வெளிப்படுத்தும் விடயங்களை குறிக்கும் படங்கள் தற்காலிகமாக காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. அதில், கலாசார ரீதியில் பின்பற்றப்படும் பழமையான நம்பிக்கைகள் மற்றும் மட்டுப்படுத்தும் சமூக பழக்கங்கள் போன்றன அடங்கியுள்ளன. மாதவிடாய் சுகாதாரத்துடன் தொடர்புடைய சவால்கள் மற்றும் நம்பிக்கைகள் தொடர்பில் பொது மக்களுக்கு பலமான நினைவூட்டலை இந்த நடவடிக்கை வழங்கியிருந்தது.
அறிமுக தினத்தன்று, தற்காலிகமாக நிறுவப்பட்டிருந்த மேற்பகுதி வைபவ ரீதியாக திறக்கப்பட்டு, அதனுள் காணப்பட்ட ஓவிய அலங்காரமான நிலையான சுவர் நிறுவல் வெளிப்படுத்தப்பட்டிருந்தது. இந்த விறுவிறுப்பான ஓவியத்தினூடாக மாதவிடாய் பற்றிய நேர்த்தியான தகவல்கள் வழங்கப்படுவதுடன், உடற்பயிற்சி, சுய-பராமரிப்பு மற்றும் திறந்த தன்மை போன்ற தொனிப்பொருட்களுக்கு முக்கியத்துவமளிக்கப்பட்டிருந்தன.
விசேடமாக, தற்காலிகமாக நிறுவப்பட்டிருந்த மேற்பகுதி 200 தனித்துண்டுகளாக நீக்கப்பட்டிருந்தன. அவற்றின் பின்பகுதிகளில் நேர்த்தியான மாதவிடாய் சுகாதாரம் பற்றிய தகவல் பதிவிடப்பட்டிருந்தது. பங்குபற்றுனர்கள் இந்த அம்சங்களை தமது இல்லங்களுக்கு கொண்டு செல்வதற்காக அழைக்கப்பட்டதுடன், அதனூடாக பழமை நம்பிக்கையை நீக்கும் இணைந்த முயற்சியில் பங்கேற்பதுடன், நிகழ்வின் பின்னர் விழிப்புணர்வை மேம்படுத்தவும் எதிர்பார்க்கப்பட்டிருந்தது.
இந்த ஆக்கபூர்வமான செயற்பாடு, வலுவூட்டுவதற்கான அடையாளமாக அமைந்திருந்தது. பல வருடங்களுக்கு இந்த சுவர் ஓவியம் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் என்பதுடன், மாதவிடாய் சுகாதாரம் என்பது ஒளிவு மறைவின்றி, வெளிப்படையாக பேசப்பட வேண்டிய விடயம் என்பதை நினைவூட்டுவதாக அமைந்திருக்கும்.
2021 ஆம் ஆண்டு முதல், Fems அதன் HER மையத்தினூடாக, பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் பின்தங்கிய சமூகங்களைச் சேர்ந்த 300,000 க்கும் அதிகமான இளம் பெண்களுக்கு மாதவிடாய் சுகாதாரம் தொடர்பில் நிலவும் பழமையான நம்பிக்கைகளை நீக்கி, விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணிகளை முன்னெடுத்துள்ளது. இலங்கையின் முதலாவது மாதவிடாய் கணிப்பானான Fio by Fems இன் அறிமுகத்துடன், தனது செயற்பாடுகளை டிஜிட்டல் மயப்படுத்தியுள்ளது. அதனூடாக பட்டம் பயில்வோருக்கும், இளம் பருவத்தைச் சேர்ந்தவர்களுக்கும் மாதவிடாய் சுகாதாரம் பற்றி பயின்று, பின்பற்றி, உரையாடுவதற்கு வலுச்சேர்க்கிறது.
Fems பற்றி:
பெண்கள் மாதவிடாய் சுகாதார அணையாடை வர்த்தக நாமமாக 2004 ஆம் ஆண்டில் Fems ஆரம்பிக்கப்பட்டது. பெண்களுக்கு சுதந்திரமாகவும், சமூகமட்டத்தில் காணப்படும் கட்டுப்பாடுகளிலிருந்து விடுபட்டு வெளியில் வருவதற்கும் கைகொடுப்பதை இலக்காகக் கொண்டு செயலாற்றுகின்றது.
சிக்கனமான, உயர் தரம் வாய்ந்த சுகாதார அணையாடைகளை சகல நிலைகளையும் சேர்ந்த பெண்களுக்கு இலகுவாக பெற்றுக் கொள்ளக்கூடிய வசதியை வழங்குவதற்கு Fems தன்னை அர்ப்பணித்துள்ளதுடன், அதற்காக தனது தயாரிப்பு தெரிவுகளில் Aya தயாரிப்புகளையும் உள்ளடக்கியுள்ளது. தரத்தில் கவனம் செலுத்துவதுடன், சிக்கனமான தயாரிப்புகளை நாடும் நுகர்வோருக்காக விசேடமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆழமான புரிந்துணர்வு மற்றும் கரிசனையுடன், அதிகரித்துச் செல்லும் பெண்களுக்கான மாதவிடாய் தூய்மை தேவைகளை நிவர்த்தி செய்வதில் Fems கவனம் செலுத்தி, அவர்களுக்கு சௌகரியமாகவும், நம்பிக்கையுடனும், ஆதரவுடனும் திகழ்வதை உறுதி செய்ய பங்களிப்பு வழங்குகின்றது. பெண்கள் மாதவிடாய் கால பராமரிப்பு தயாரிப்புகளை வழங்குவதில் Fems தன்னை உறுதியாக நிலைநிறுத்தியுள்ளது. மாதவிடாய் சுகாதாரம் மற்றும் தூய்மை தொடர்பில் பெண்களுக்கு விழிப்புணர்வூட்டுவதை தனது வர்த்தக நாம நோக்காகக் கொண்டு, மாதவிடாய் தொடர்பில் நிலவும் மூட நம்பிக்கைகளை இல்லாமல் செய்வதிலும் கவனம் செலுத்துகின்றது. பெண்களின் ஆற்றலில் நம்பிக்கை கொண்டு, அவர்களின் பயணத்துக்கு ஆதரவளித்து, அவர்களின் வலிமையை கொண்டாடும் நாமமாகவும், வலுவூட்டலின் அடையாளமாகவும் Fems திகழ்கின்றது.
மேலதிக தகவல்களுக்கு, பார்வையிடவும் https://hemas.com/brands/fems.html.

