வணிகம்
மேர்க்கன்டைல் இன்வெஸ்ட்மென்ட்ஸ் தனது கிளை வலையமைப்பை 90 ஆக விரிவுபடுத்தி சமூகங்களுக்கு வலுவூட்டுகிறது

Jan 21, 2026 - 01:13 PM -

0

மேர்க்கன்டைல் இன்வெஸ்ட்மென்ட்ஸ் தனது கிளை வலையமைப்பை 90 ஆக விரிவுபடுத்தி சமூகங்களுக்கு வலுவூட்டுகிறது

இலங்கையில் 60 ஆண்டுகளுக்கு மேலான நம்பிக்கையை வென்ற வங்கிசாரா நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனங்களில் ஒன்றாகத் திகழும் மேர்க்கன்டைல் இன்வெஸ்ட்மென்ட்ஸ் பிஎல்சி (MI ஃபினான்ஸ்), டிசம்பர் மாதமளவில் தனது கிளை வலையமைப்பை 90 ஆக விரிவுபடுத்தியிருந்தது. 

அதனூடாக, இலகுவாக அணுகல், வாடிக்கையாளர் சௌகரியம் மற்றும் சமூக வலுவூட்டல் ஆகியவற்றுக்கான தனது அர்ப்பணிப்பை மீள உறுதி செய்திருந்தது. இந்த 90 ஆவது கிளை அண்மையில் தங்காலை நகரில் திறந்து வைக்கப்பட்டதுடன், அப்பிரதேசத்தைச் சேர்ந்த சமூகத்தாருக்கு நிதிச் சேவைகளை அணுகுவதற்கான வசதியை மேம்படுத்தியிருந்தது. இலங்கை முழுவதிலும் பிரதான நகரங்கள், வளர்ந்து வரும் பிரதேசங்கள் போன்றவற்றில் தனது கிளை வலையமைப்பை பரவலாகக் கொண்டுள்ளதுடன், மேர்க்கன்டைல் இன்வெஸ்ட்மென்ட்ஸ், பரந்தளவு சமூகங்கள் மத்தியில் தனது பிரசன்னத்தை தொடர்ச்சியாக உறுதி செய்யும் வகையில் அமைந்துள்ளது. நிறுவனத்தினால் வழங்கப்படும் உள்ளடக்கமான நிதிசார் வளர்ச்சியில் பரந்தளவு தீர்வுகளான லீசிங், வைப்புகள், தங்கக் கடன்கள் மற்றும் பொருத்தமான நிதிவசதியளிப்புத் தீர்வுகள் போன்றன அடங்கியுள்ளன. தனிநபர்கள், சிறிய, நடுத்தரளவு தொழில்முயற்சியாண்மைகள் மற்றும் நுண் தொழில்முயற்சியாளர்களுக்கு பிரத்தியேகமான மற்றும் நேரடியான ஆலோசனை ஆதரவுச் சேவைகளையும் மேர்க்கன்டைல் இன்வெஸ்ட்மென்ட்ஸ் வழங்குகின்றது. 

மேர்க்கன்டைல் இன்வெஸ்ட்மென்ட்ஸ் பிரதம செயற்பாட்டு அதிகாரி லக்சந்த குணவர்தன கருத்துத் தெரிவிக்கையில், “வேகமாக வளர்ந்து வரும் வங்கிசாரா நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனம் என கௌரவிக்கப்பட்டுள்ளமையினூடாக, எம்மீது வாடிக்கையாளர்கள் கொண்டுள்ள நம்பிக்கை மற்றும் லோயல்டி ஆகியன மேலும் வலிமைப்படுத்தப்பட்டுள்ளன. கடந்த இரு வருடங்களில் மேர்க்கன்டைல் இன்வெஸ்ட்மென்ட்ஸ் நிறுவனத்தின் துரித கிளை விரிவாக்கத்தினூடாக, போட்டிகரமான அனுகூலத்தைக் கொண்டிருப்பதற்கான மூலோபாய பயணத்தை பிரதிபலிப்பதுடன், உயர்ந்த நிலையைச் சேர்ந்த நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனம் எனும் அதன் நிலையை மீள உறுதி செய்துள்ளது. நம்பிக்கை மற்றும் நீண்ட கால உறவுகளை கட்டியெழுப்புவதில் நேரடி அணுகல் திறன் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. அதேவேளை, டிஜிட்டல் கட்டமைப்புகளில் தொடர்ச்சியாக முதலீடுகளை மேற்கொண்டு வாடிக்கையாளர்களின் அணுகலை மேம்படுத்தல் மற்றும் சௌகரியத்தை கட்டியெழுப்பல் போன்றவற்றினூடாக புத்தாக்கம் மற்றும் வாடிக்கையாளர் மையப்படுத்திய செயற்பாடுகளில் எமது அர்ப்பணிப்பு மீள உறுதி செய்யப்பட்டுள்ளது.” என்றார். 

மேர்க்கன்டைல் இன்வெஸ்ட்மென்ட்ஸ் நிறுவனத்தின் உறுதியான வளர்ச்சி மற்றும் நெறிமுறையான செயல் நிறைவேற்றம் போன்றவற்றினூடாக பெருமளவு சாதனைகள் எய்தப்பட்டுள்ளன. 2025 ஆம் ஆண்டில், நிறுவனம் ரூ. 100 பில்லியன் சொத்துகள் இருப்பை கடந்து, கட்டமைக்கப்பட்ட விரிவாக்க மூலோபாயத்தை வெளிப்படுத்தியிருந்ததுடன், 250,000 க்கும் அதிகமான இலங்கையர்களால் நிறுவனத்தின் மீது பேணப்படும் நம்பிக்கை பிரதிபலிக்கப்பட்டிருந்தது. 

நிறுவனத்தின் கடன்வழங்கல் பிரிவு ரூ. 37 பில்லியனிலிருந்து ரூ. 75 பில்லியனாக உயர்ந்திருந்ததுடன், தங்கக் கடன்கள் பிரிவு ரூ. 2 பில்லியன் என்பதிலிருந்து ரூ. 12 பில்லியனாக ஆறு மடங்கு உயர்ந்திருந்தது. மேலும், வைப்புகள் ரூ. 36 பில்லியன் என்பதிலிருந்து ரூ. 51 பில்லியனாக உயர்ந்திருந்தது. இவற்றினூடாக, வாடிக்கையாளர்களின் நம்பிக்கை மற்றும் நிலைபேறான திரள்வு உட்பாய்ச்சல்கள் வெளிப்படுத்தப்பட்டிருந்தன. முக்கியமாக, அரையாண்டு காலப்பகுதியில் மேர்க்கன்டைல் இன்வெஸ்ட்மென்ட்ஸ் குறைந்த NPL விகிதமான 4.65% ஐ பேணியிருந்தது. 

மேர்க்கன்டைல் இன்வெஸ்ட்மென்ட்ஸ் முகாமைத்துவ பணிப்பாளர் ஜெராட் ஒன்டாட்ஜி கருத்துத் தெரிவிக்கையில், “ரூ. 50 பில்லியன் வைப்பு இருப்பை கடந்து மற்றும் நிலைபேறான வளர்ச்சியை தக்க வைத்துள்ளமையினூடாக, மேர்க்கன்டைல் இன்வெஸ்ட்மென்ட்ஸ் மீது வாடிக்கையாளர்கள் தொடர்ச்சியாக பேணும் நம்பிக்கை வெளிப்படுத்தப்பட்டுள்ளது. ஆறு தசாப்த காலமாக கட்டியெழுப்பப்பட்ட வைப்பாளர் ஈடுபாடு மற்றும் அர்த்தமுள்ள பெறுமதியை ஏற்படுத்திக்கொடுக்கும் நோக்கில் கட்டியெழுப்பப்பட்ட நம்பிக்கையை இது பிரதிபலிக்கிறது. இவற்றினூடாக இலங்கையின் பொருளாதார வலிமையில் பங்களிப்புச் செய்யும் நம்பிக்கையை வென்ற நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனம் எனும் மேர்க்கன்டைல் இன்வெஸ்ட்மென்ட்ஸ் நிறுவனத்தின் நிலை மேலும் வலிமைப்படுத்தப்பட்டுள்ளது.” என்றார். 

அவர் மேலும் குறிப்பிடுகையில், “பொருளாதார மாற்றங்களைக் கையாள்வதற்கும், வளர்ந்து வரும் புதிய வணிக வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வதற்கும் நிறுவனம் ஒரு வலுவான நிலையில் உள்ளது. மேலும், இந்த நிதியாண்டில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள், நடுத்தர காலப் பகுதியில் நிலையான வருமான மற்றும் இலாப வளர்ச்சியின் மூலம் சிறந்த பலன்களை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.” என்றார். 

2027-ஆம் ஆண்டு வரையிலான விரிவாக்கத் திட்டங்கள் மற்றும் e-wallets, இணைய வங்கிச் சேவைகள் மற்றும் கார்ட் சேவைகள் உள்ளிட்ட டிஜிட்டல் உட்கட்டமைப்புகளில் மேற்கொள்ளப்படும் மூலோபாய ரீதியான முதலீடுகள் மூலம், மேர்க்கன்டைல் இன்வெஸ்ட்மென்ட்ஸ் நிறுவனம் தனது புதிய வளர்ச்சியைத் தொடர்ச்சியான போட்டித்திறன் மிக்க நன்மையாக மாற்றத் தயாராக உள்ளது. 

இந்தச் சாதனைகள், அதன் வாடிக்கையாளர்களுக்கும் பங்குதாரர்களுக்கும், நிறுவனத்தின் அடுத்தகட்ட வளர்ச்சிக்கான ஒரு வலுவான அடித்தளத்தை வெளிப்படுத்துகின்றன. இந்த வளர்ச்சியானது ஸ்திரத்தன்மை, நம்பிக்கை மற்றும் வாடிக்கையாளர் மேம்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் அமையும். ஒரு நம்பகமான நிதி நிறுவனம் என்ற ரீதியில், மேர்க்கன்டைல் இன்வெஸ்ட்மென்ட்ஸ் இலங்கையின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதிலும், நாட்டின் முன்னேற்றத்திற்கு ஆதரவளிப்பதிலும் தொடர்ந்து முக்கிய பங்காற்றி வருகின்றது.

Comments
0

MOST READ
01
02
03
04
05