Jan 21, 2026 - 06:06 PM -
0
அரச பெருந்தோட்ட காணிகளை 99 வருடங்களுக்கு மீண்டும் தனியார் நிறுவனங்களுக்கு வழங்கவுள்ளதாக கூறப்படுகின்றது. அவ்வாறான ஒரு தவறை ஒருபோதும் செய்துவிட வேண்டாம் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் வலியுறுத்தியுள்ளார்.
அந்த மக்கள் உங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை சிதைத்துவிட வேண்டாம் என தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றில் இன்று (21) கருத்து வௌியிடும் போதே, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1750 ரூபாய் வழங்கப்பட வேண்டும் என்பதை அரசாங்கம் வர்த்தமானியில் வௌியிட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

