Jan 21, 2026 - 08:31 PM -
0
அமெரிக்காவைத் தவிர வேறு எந்த நாட்டாலும் கிரீன்லாந்தைப் பாதுகாக்க முடியாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்று வரும் உலகப் பொருளாதார மன்றத்தில் இன்று (21) உரையாற்றிய போதே, அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
"கிரீன்லாந்து மற்றும் டென்மார்க் நாட்டு மக்கள் மீது நான் மிகுந்த மரியாதை கொண்டுள்ளேன். ஆனால், நேட்டோ (NATO) அமைப்பில் உள்ள ஒவ்வொரு நட்பு நாடும் தமது சொந்த நிலப்பரப்பைப் பாதுகாக்கும் கடமையைக் கொண்டுள்ளன.
உண்மையைச் சொன்னால், அமெரிக்காவைத் தவிர வேறு எந்த நாடும் அல்லது நாடுகளின் குழுவும் கிரீன்லாந்தைப் பாதுகாக்கும் நிலையில் இல்லை. நாம் ஒரு வல்லரசு நாடு.
கிரீன்லாந்து தற்போது பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், கிரீன்லாந்தை அமெரிக்கா கையகப்படுத்துவது குறித்து மீண்டும் ஒருமுறை விவாதிப்பதற்கான உடனடி பேச்சுவார்த்தைகளை நான் எதிர்பார்க்கிறேன்.
கிரீன்லாந்தை அமெரிக்கா பலவந்தமாக கையகப்படுத்த போவதில்லை. எனினும், அமெரிக்கப் பொருளாதாரம் வளர்ச்சியடைந்து வரும் நிலையில், ஐரோப்பா சரியான திசையில் செல்லவில்லை.
நான் ஐரோப்பாவை நேசிக்கிறேன், அது சிறப்பாக இருக்க வேண்டும் என விரும்புகிறேன். ஆனால் நாம் வலிமையான நட்பு நாடுகளையே விரும்புகிறோம், பலவீனமானவர்களை அல்ல எனவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

