Jan 22, 2026 - 09:39 AM -
0
நியூசிலாந்தின் முகாம் தளம் ஒன்றில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி, குழந்தை உட்பட சிலர் காணாமல் போயுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நியூசிலாந்தின் சுற்றுலாத் தளமான மவுண்ட் மவுங்கனுய் (Mount Maunganui) பகுதியில் உள்ள முகாம் தளத்திலேயே இந்த மண்சரிவு பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
உயிர்தப்பியவர்களைக் கண்டறிய மீட்புக் குழுவினர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நிலவும் பலத்த மழை மற்றும் காற்று காரணமாக மின்சாரத் துண்டிப்புக்களும் பதிவாகியுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓக்லாந்து நகரைச் சுற்றியுள்ள பல பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதுடன், காலநிலை முன்னெச்சரிக்கைகளும் விடுக்கப்பட்டுள்ளன.
ஓக்லாந்து நகருக்கு வடக்கே அமைந்துள்ள மஹுரங்கி ஆற்றின் நீர்மட்டம் ஆபத்தான அளவிற்கு உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால், அத்தியாவசியமற்ற அனைத்து பயணங்களையும் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

