செய்திகள்
இவர் தொடர்பில் விபரம் தெரிந்தால் உடனே அழையுங்கள்!

Jan 22, 2026 - 12:30 PM -

0

இவர் தொடர்பில் விபரம் தெரிந்தால் உடனே அழையுங்கள்!

தெஹிவளை பிரதேசத்தில் கடந்த டிசம்பர் 30 ஆம் திகதி, 16 வயது சிறுமி மீது துப்பாக்கிச் சூடு நடத்தி கொலை செய்ய முயற்சித்த சம்பவம் தொடர்பில், சந்தேக நபரை கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். 

மேற்கொள்ளப்பட்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளில், இவரே இந்த குற்றத்தை இழைத்த துப்பாக்கிதாரி என்பது தெரியவந்துள்ளது. 

‘அருமதுர சமீர சில்வா’ எனப்படும் குறித்த நபர் தொடர்பான தகவல்களை, 071-8596408 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக கல்கிஸ்ஸ பொலிஸ் நிலையத்தின் குற்றப் புலனாய்வுப் பிரிவின் நிலையப் பொறுப்பதிகாரிக்கு அறிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Comments
0

MOST READ
01
02
03
04
05