Jan 22, 2026 - 01:39 PM -
0
இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி நாக்பூரில் நேற்று (21) நடைபெற்றது. நாணய சுழற்சியில் வென்ற நியூசிலாந்து முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 238 ஓட்டங்களை குவித்தது. இந்திய அணி சார்பாக அதிரடியாக ஆடிய அபிஷேக் சர்மா சிக்சர், பவுண்டரிகளாக விளாசினார். அவர் 35 பந்தில் 8 சிக்சர், 5 பவுண்டரி உள்பட 84 ஓட்டங்களை பெற்றார்.
அடுத்து களமிறங்கிய நியூசிலாந்து 20 ஓவரில் 190 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 48 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றதுடன், டி20 தொடரில் 1 - 0 என முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில், இந்திய ஆரம்ப துடுப்பாட்ட வீரரான அபிஷேக் சர்மா ஒட்டுமொத்த டி20 கிரிக்கெட்டில் (அனைத்தரப்பு போட்டிகள்) இதுவரை 169 போட்டிகளில் விளையாடி 5,002 ஓட்டங்களை சேர்த்துள்ளார். அவர் 2,898 பந்துகளில் இந்த மைல்கல்லை எட்டியுள்ளார்.
இதன்மூலம் குறைந்த பந்தில் 5,000 ஓட்டங்களை கடந்த வீரர் என்ற சாதனையை மேற்கிந்திய அணிகளின் ஆன்ட்ரே ரசலின் சாதனையை முறியடித்தார்.

