Jan 22, 2026 - 01:40 PM -
0
செலான் வங்கி நாட்டின் சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களை (SME) ஆதரிக்கும் நோக்கில் தனது இரண்டாவது SME திட்டத்தை அண்மையில் வட மத்திய பிராந்தியத்தில் முன்னெடுத்தது. பொலன்னறுவையில் உள்ள ஹோட்டல் மஹானுகேயில் நடைபெற்ற இந் நிகழ்வு, அப்பகுதியில் உள்ள சிறிய மற்றும் நடுத்தர வணிக உரிமையாளர்களிடையே நிதி கல்வியறிவை மேம்படுத்துவதையும் அவர்களின் செயற்பாடுகளை நிர்வகிக்கவும் விஸ்தரிக்கவும் தேவையான நடைமுறை அறிவை வழங்குவதையும் நோக்கமாக கொண்டிருந்தது.
செலான் வங்கியால் ஏற்பாடு செய்யப்பட்டு நிர்வகிக்கப்படும் இம் முழு நாள் அமர்வு, பிராந்தியத்தின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது. இந் நிகழ்வு நிதி மற்றும் வரி முகாமைத்துவம் தொடர்பான கருத்தரங்கை உள்ளடக்கியிருந்தது. இதன் போது வணிக நிதிகளை நிர்வகித்தல், இணக்கத்தைப் பராமரித்தல் மற்றும் நிலையான வளர்ச்சிக்கான திட்டமிடல் குறித்து தெளிவான வழிகாட்டுதல் வழங்கப்பட்டதுடன் தொழில்முனைவோர் தங்கள் குறிப்பிட்ட சூழ்நிலைகளில் வணிக வளர்ச்சியை எவ்வாறு திட்டமிட முடியும் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
இந்த முயற்சி குறித்து பேசிய செலான் வங்கியின் சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனை உதவி பொது முகாமையாளர் ஆசிரி அபயரத்ன, நிதி ரீதியாக அறிவுள்ள தொழில்முனைவோரை உருவாக்குவது SME துறையை வலுப்படுத்துவதற்கும் பிராந்திய வணிக வளர்ச்சியை ஆதரிப்பதற்கும் அவசியமானதொன்றாகும். அன்புடன் அரவணைக்கும் வங்கியாக நாடு முழுவதும் உள்ள SMEகளுக்கு இவ்வாறான அறிவு சார்ந்த தளங்களை நாங்கள் தொடர்ந்து வழங்குவோம். என்றார்.
செலான் வங்கி, சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் துறையை மேம்படுத்தும் குறிக்கோளுடன் ஏராளமான நிறுவனங்களுடன் இணைந்து இலங்கை முழுவதும் இதே போன்ற பல நிகழ்வுகளை நடத்தி வருகிறது. SMEஐ மையமாகக் கொண்ட இத் திறன் மேம்பாட்டுத் திட்டங்கள், நீண்டகால வணிக ஸ்திரத்தன்மைக்குத் தேவையான தகவல், நிதி கருவிகள் மற்றும் ஆலோசனை ஆதரவை வணிக உரிமையாளர்களுக்கு வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.

