Jan 22, 2026 - 01:42 PM -
0
JXG (ஜனசக்தி குழுமம்)இன் துணை நிறுவனமான ஜனசக்தி லைஃப், “ICA சர்வதேச அரை மரதன் கொழும்பு 2025” உடன் கைகோர்த்தது. இலங்கையில் இரண்டாவது முறையாக நடைபெற்ற இந் நிகழ்வில் 2,000இற்கும் மேற்பட்ட உள்ளூர் மற்றும் சர்வதேச ஓட்டப்பந்தய வீரர்கள் கலந்து கொண்டனர். இந் நிகழ்வானது சமூகங்களை மேம்படுத்துவதிலும் நாட்டில் நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்தும் நிகழ்வுகளை ஆதரிப்பதிலும் ஜனசக்தி லைஃப்பின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.
இவ்வாண்டின் மரதன் ஓட்டம்; உடலுறுப்பு தானத்தின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தல், சர்வதேச பயணிகளை வரவேற்கும் இடமாக இலங்கையை காட்சிப்படுத்தல் மற்றும் கிட்டத்தட்ட 10,600 நலிவடைந்த சிறுவர்களுக்கு பராமரிப்பு வழங்கும் 367 அனாதை இல்லங்களை ஆதரித்தல் ஆகியவற்றை நோக்கமாக கொண்டிருந்தது.
இந் நிகழ்வு 5km Family Run, 10km Challengers Run மற்றும் 21.1km அரை மரதன் ஆகிய மூன்று பந்தயப் பிரிவுகளை உள்ளடக்கியிருந்தது. ஒவ்வொரு பிரிவிலும் முதல் 10 இடங்களை பிடித்த ஆண் மற்றும் பெண் வீரர்களுக்கு ரூ.5.7 மில்லியன் பெறுமதியான பரிசுத் தொகை வழங்கப்பட்டது. இந் நிகழ்வு, போட்டியைத் தாண்டி கருணை, ஆரோக்கியம் மற்றும் கூட்டுப் பொறுப்பு ஆகிய பகிரப்பட்ட விழுமியங்களைச் சுற்றி மக்களை ஒன்றிணைப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தது.
Title அனுசரணையாளராக ஜனசக்தி லைஃப்பின் பங்கு குறித்து கருத்து தெரிவித்த அதன் பணிப்பாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி ரவி லியனகே, “ஜனசக்தி லைஃப்பில் எமது நோக்கம் காப்புறுதிக்கு அப்பாற்பட்டது. நாம் சேவை செய்யும் சமூகங்களை வலுப்படுத்த நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். ICA சர்வதேச அரை மரதன் கொழும்பு 2025 உடனான எமது இணைவு உடலுறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது முதல் உதவி தேவைப்படும் சிறுவர்கள் மற்றும் குடும்பங்களுக்கு உதவுவது வரை அர்த்தமுள்ள தேசிய முன்னெடுப்புகளுக்கு ஆதரவு வழங்க எமக்கு உதவியது. நம்பிக்கைக்கு வித்திடும் மற்றும் நேர்மறையான மாற்றத்தை ஊக்குவிக்கும் நோக்கங்களிற்காக மக்களை ஒன்றிணைக்கும் தளத்தை உருவாக்குவதில் ICA உடன் இணைந்து நிற்பதில் நாங்கள் பெருமைப்படுகிறோம்.” என்றார்.
உலகம் முழுவதிலுமிருந்து ஓட்டப்பந்தய வீரர்களை வரவேற்க இலங்கை தயாராகி வரும் வேளையில், ஜனசக்தி லைஃப் - ICA சர்வதேச அரை மரதன் கொழும்பு 2025 ஆனது தடகள சிறப்பைக் கொண்டாடியதுடன் பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்குவதில் சமூகம் சார்ந்த முன்முயற்சிகளின் சக்தியையும் எடுத்துக்காட்டியது.
ஜனசக்தி லைஃப் பற்றி
1994 ஆம் ஆண்டு ஆயுள் காப்புறுதி நிறுவனமாக ஸ்தாபிக்கப்பட்ட ஜனசக்தி இன்சூரன்ஸ் பிஎல்சி (ஜனசக்தி லைஃப்), துறையில் புத்தாக்கமான செயற்பாட்டாளராக தன்னை அடையாளப்படுத்தியுள்ளதுடன், 30 வருடங்களுக்கு மேலாக அனைவர் மத்தியில் அறியப்படும் நாமமாகவும் திகழ்கின்றது. ஜனசக்தி இன்சூரன்ஸ் பிஎல்சி நிறுவனமானது, இலங்கை காப்புறுதி ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவினால் உரிமம் பெற்றுள்ளது. இது நாடு முழுவதிலும் உறுதியான பிரசன்னத்தை கொண்டுள்ளதுடன் பரந்த 76 கிளைகள் மற்றும் பிரத்தியேகமான அழைப்பு நிலையத்தையும் கொண்டுள்ளது. மேலும், “வாழ்க்கையை மேம்படுத்தல் மற்றும் கனவுகளுக்கு வலுவூட்டல்” எனும் நோக்கத்துக்கமைய, ஆயுள் காப்புறுதித் துறையில் முன்னோடியாக திகழ்வதற்காக ஜனசக்தி லைஃப் தன்னை அர்ப்பணித்துள்ளதுடன், அதற்காக தனது வாடிக்கையாளர்கள் மற்றும் பங்காளர்களுக்கு காப்புறுதிக்கு அப்பாலான சேவையை வழங்குகின்றது.

